இந்திய அரசு அதிகாரபூர்வமாக எலேக்ட்ரோனிக் பாஸ்போர்ட் (e-passport) சேவையை அறிமுகம் செய்துள்ளது, இந்த புதிய இ-பாஸ்போர்ட் பயணிக்கும்போது பாதுகாப்பனது மற்றும் இதை பயன்படுத்துவது சுலபமாக இருக்கும், மேலும் இந்த புதிய சிஸ்டம் மூலம் உங்களின் பாதுகாப்பு பலமடங்கு பத்திரமாக இருக்கும் மேலும் இது வெளிநாடு செல்லும் பயணிகளின் வெரிபிகேஷன் அதிவேகமாக முடியும் மேலும் இதன் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
E-Passport என்றால் என்ன?
E-Passport என்பது பார்க்க சாதாரண ரெகுலர் இந்தியன் பாஸ்போர்ட் போல தான் இருக்கும், ஆனால் இதில் சிறிய எலக்ட்ரோனிக் சிப் அதன் பின்புற கவரில் இருக்கும், அந்த சிப்பில் பயணிகளின் தனிப்பட்ட தகவல் பயோமெட்ரிக் வடிவில் வைத்திருக்கப்படும், அதாவது அதில் பிங்கர்ப்ரின்ட், பேசியல் ரெகோக்னேஷன் டேட்டா மற்றும் டிச்ஜிட்டல் சிக்னேஜர் போன்றவற்றை அமைந்திருக்கும் இந்த அனைத்து தகவலும் அந்த பாஸ்போர்டில் இருக்கும் சிப் வடிவில் இருக்கும் இதன் மூலம் போலி பாஸ்போர்ட் பிரச்சனை இருக்காது மற்றும் இதை பத்திரமாக வைக்க முடியும் கிளிஞ்சது, அழிந்தது என பிரச்சனையும் இருக்காது.
E-passports எளிதாக அடையாளம் காணும் விதமாக கோல்ட் கலர் (symbol) அதாவது முத்திரை இருக்கும் , இதன் மூலம் ஏர்போர்ட் மற்றும் பார்டர் செக்கிங்கில் அந்த சிப்பை ஒரே ஒரு ஸ்கேன் செய்வதன் மூலம் தகவலை அதிவேகமாக பெற முடியும் இதன் மூலம் பயணிகள் அதிக நேரம் காத்திருக்கும் தொல்லை இல்லை மலும் பயணம் செய்யும் செயல்முறை பாதுகப்பனதகும்
இந்த e-passport சேவையை யார் அப்ளை செய்ய வேண்டும்?
சாதரண பாஸ்போர்ட் பயன்படுத்துவோர் இந்த e-passport சேவைக்கு அப்ளை செய்யலாம், இருப்பினும் இந்த வசதி தற்பொழுது ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சேவா கேந்திரா (PSKs) மற்றும் போஸ்ட் ஆபிஸ் பாஸ்போர்ட் சேவா கேந்திரா (POPSKs) நாடு முழுக்க அப்ளை செய்யலாம்.
நீங்கள் இ-பாஸ்போர்டுக்கு அப்ளை செய்யுமுன் முதலில்அந்த அலுவலகத்தில் இ-பாஸ்போர்ட் சேவை இருக்கிறதா என சரிபார்க்கலாம் மேலும் இந்த சேவையை புதிய மற்றும் ஏற்கனவே இருக்கும் பாஸ்போர்ட் ரினிவ் செய்யும்போது இ-பாஸ்போர்ட் எளிதாக பயன்படுத்த முடியும்.
e-passport அப்ளிகேஷன் செயல்முறை என்ன?
இந்த e-passport வின்னபிப்பது சாதாரண பாஸ்போர்ட் போல விண்ணபிக்கலாம்.
முதலில் அதன் அதிகாரபூர்வ Passport Seva போர்ட்டல் செல்லவும்.
அதன் பிறகு அதிலிருக்கும் ஆன்லைன் அப்ளிகேஷன் படிவத்தை ஆன்லைனில் நிரப்பவும்.
அதன் பிறகு தேவையான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
அதன் பிறகு உங்கள் வீட்டின் அருகில் உள்ள PSK or POPSK அப்போயின்ட்மென்ட் செய்யலாம்.
நீங்கள் செல்லும்போது உங்களின் தகவலை அதாவது பிங்கர்ப்ரின்ட், மற்றும் போட்டோக்ரப் கலெக்ட் செய்து பயோமெட்ரிக் டேட்டாவாக வைக்கப்படும்.
மேலும் இந்த செயல்முறை சரியாக முடிந்தது e-passport அச்சிடப்பட்டு எலேட்ரோனிக் சிப் வடிவில் உங்களின் ரெஜிஸ்டர்ட் முகவரிக்கு வந்து சேரும்
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.