Use and Benefits of RailOne App
தீபாவளிக்கு ஊருக்கு போகனுமா ஆனா டிக்கெட் கிடைக்கல என்ன செய்வது என்று முழித்து கொண்டிருக்கிங்களா பண்டிகை காலம் என்றாலே குடும்பத்துடன் கொண்டாடுவது தனி சந்தோஷம் ஆகும். தத்கால் டிக்கெட்டுகளை எதிர்பார்த்து ஆயிரக்கணக்கான மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் அதாவது அப்படி கூட புக் செய்ய முடியவில்லை தீபாவளிக்கு நீங்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தால் , மீதமுள்ள ஒரே வழி ஜெனரல் டிக்கெட்டுகள் அல்லது அன்ரிசர்வ்ட் டிக்கெட் ஆகும், ஆனால் இதற்கும் பல்லாயிர கணக்கான வரிசையில் அடித்து பிடித்து நீண்ட வரிசையில் நிற்க வேண்டி இருக்கு ஆனால் எந்த ஒரு வரிசையில் நிற்காமல் ஆன்லைனில் அன்ரிசர்வ்ட் டிக்கெட் எப்படி வாங்குவது என பார்க்கலாம் வாங்க
RailOne செயலியைப் பயன்படுத்தி, உங்கள் வீட்டில் இருந்தபடியே பொது அல்லது முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டுகளை வாங்கலாம். இந்தச் செயலியை Google Play Store மற்றும் Apple இன் App Store இல் இலவசமாகப் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யலாம்.