தீபாவளி வரபோகுது வீட்டுக்கு போக உடனடியாக ரயில் டிக்கெட் உங்கள் மொபைலில் புக் செய்வது எப்படி?

Updated on 24-Sep-2025

தீபாவளி பண்டிகை நெருங்கிய நிலையில் விடுமுறைக்கு பலர் அவர் அவர் வீட்டுக்கு பண்டிகையை கொண்டாட செல்வது வழக்கம், ஒரு பண்டிகையை தங்களின் குடும்பத்தினருடன் கொண்டாடுவது ஒரு தனி மகிழ்ச்சி தான். இங்கு பலர் .படிப்பு அல்லது வேலை காரணமாக வீடுகளை விட்டு விலகி இருக்கிறார்கள் எதாவது பண்டிகை காலத்தின் பொது தங்கள் வீடுகளுக்குச் செல்கிறார்கள்.

இத்தகைய சூழ்நிலையில் கூட்டம் நெரிசல் அதிகம் இருக்கும் காரணத்தால் ரயில் டிக்கெட் உடனடியாக கிடைப்பது கடினம். ரயில் நிலையங்களில் நீண்ட வரிசைகள் நிர்கப்படுகிறது. இந்த வரிசையில் நிற்ப்பதை தவிர்க்க அரசு மக்களுக்காக பல வசதியை கொண்டு வந்துள்ளது அதில் அதே போல அரசு UTS ஆப் அறிமுகம் செய்தது, இந்த ஆப்யின் மூலம் உடனடியாக ரயில் டிக்கெட் புக் செய்ய முடியும் இதன் மூலம் வீட்டில் இருந்தபடி ரயில் டிக்கெட் புக் செய்யலாம்.

இதையும் படிங்க:IRCTC புது ரூல் அக்டோபர் 1 முதல் மாற்றம் ரயிலில் பயணிக்கும் பயணிகள் கட்டாயம் தெருஞ்சிகொங்க

UTS ஆப் என்றால் என்ன ?

UTS (Unreserved Ticketing System) App என்பது இந்திய ரயிவேயின் மொபைல் ஆப் ஆகும், இதில் CRIS (Centre for Railway Information Systems) மூலம் உருவாக்கப்பட்டது. இந்த ஆப் உள்ளூர் ரயில், பயணிகள் ரயில் மற்றும் முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டுகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம், மேலும் டிக்கெட் உங்கள் மொபைல் போனில் நேரடியாக உருவாக்கப்படும். நீங்கள் அதை பிரிண்ட் செய்ய வேண்டியதில்லை.

இந்த ஆப் மூலம், பயணிகள் வரிசையில் காத்திருக்காமல் பொதுப் பேருந்துகள், பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் மற்றும் சீசன் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். தகவலுக்கு, இந்த ஆப் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கூகிள் பிளே ஸ்டோரிலும், ஐபோன் பயனர்களுக்கு ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும் கிடைக்கிறது.

இந்த ஆப் மூலம் உடனடியாக ரயில் டிக்கெட் புக் செய்வது எப்படி?

  1. நீங்களும் நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிர்க்க விரும்பினால், இந்த ஆப்பை பயன்படுத்தி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
  2. இதற்காக, முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் UTS செயலியைப் டவுன்லோட் செய்ய வேண்டும்.
  3. அதன் பிறகு, உங்கள் மொபைல் நம்பர் மற்றும் கேட்கப்பட்ட தகவலை உள்ளிட்டு ரெஜிஸ்ட்டர் செய்யவும்.
  4. ரெஜிஸ்ட்டர் செய்த பிறகு, நீங்கள் ஒரு பாஸ்வர்டை உருவாக்க வேண்டும். பின்னர் உங்கள் லாகின் ஐடி மற்றும் பாஸ்வர்ட் பயன்படுத்தி பயன்பாட்டில் லோகின் செய்யவும் .
  5. இப்போது நீங்கள் டிக்கெட்டை புக் செய்ய விரும்பினால், புக் டிக்கெட் என்பதைக் கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு, நீங்கள் எங்கிருந்து பயணிக்க விரும்புகிறீர்கள் என்பதற்கான ரயிலை உள்ளிடவும்.
  6. பின்னர் பணம் செலுத்துங்கள். பணம் செலுத்துதல் வெற்றிகரமாக முடிந்தவுடன், டிக்கெட் உங்கள் அக்கவுண்டில் டிஜிட்டல் பார்மேட்டில் கிடைத்துவிடும் .

இந்த வழியில், பண்டிகைகளின் போது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்த முடியும், மேலும் நீங்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டியதில்லை

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :