இயக்குநர் பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாமன் திரைப்படம் தற்பொழுது தியேட்டரில் மிகவும் கலக்கி வருகிறது சூரியின் எதார்த்தமான நடிப்பில் உருவாகிய இந்த படம் மக்கள் மத்தியில் மிக பெரிய வர வேர்ப்பை பெற்றுள்ள குடும்ப திரைப்படமாகும் இந்த்த படம் மே 16 தியேட்டரில் ரிலிசாகியது இதை தவிர இதன் மறுபக்கம் Tourist Family குறைந்த பட்ஜெட்டில் மிக பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது மேலும் தற்பொழுது இதன் OTT தேதி விடப்பட்டுள்ளது குழந்தைகளுக்கு விடுமுறையின் காரணமாக நீங்கள் இந்த படங்களை குடும்பத்துடன் பார்க்கலாம் மேலும் இப்படத்தின் தகவல்களை பார்க்கலாம் வாங்க.
இயக்குநர் பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாமன் திரைப்படத்தில் சூரி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் தியேட்டரில் மே 16,2025 வெளியானது மேலும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வாசிகா, ராஜ்கிரண், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மேலும் இப்படம் தாய் மாமன் பாசத்தையும் இதை தவிர ஒரு அக்கா, தம்பி பாசம் போன்றவற்றை மக்கள் மனதில் மிக பெரிய இடம் பிடித்துள்ளது மேலும் குடும்பம் திரைப்படம் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்ள் வரை பார்க்கலாம்
மேலும் இப்படத்தின் வசூல் சாதனை பற்றி பேசினால் மூன்று நாட்களில் மிக பெரிய வசூல் சாதனை பெற்றுள்ளது அதாவது ரூ. 9.5 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் இந்த படத்தின் வசூல் இங்கு முடிந்து விடவில்லை இன்னும் அதிகம் வசூலை பெரும் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுகிறது
சசி குமார் நடித்த் டுரிஸ்ட் பேமிலி மே 1, 2025 அன்று தியேட்டரில் வெளியாகியது இப்படத்தை புதுமுக இயக்குனர் அபிஷான் ஜீவிந்த் இயக்கியுள்ளார் மேலும் இப்படம் சிறிய பட்ஜெட்டில் பெரிய வெற்றியை பெற்று தந்துள்ளது மேலும் சசிகுமார் பல ஹிட் படம் கொடுத்தார் மேலும் டூரிஸ்ட் பேமிலி படத்தில் இவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார் மேலும் இப்படம் சுந்தர பாண்டியன் மற்றும் குட்டிப்புல்லியை விட அதிக முந்தி சென்றுள்ளது
Tourist Family தற்பொழுது தியேட்டரில் மிக சிறப்பாகவே ஓடி வருகிறது மேலும் தற்பொழுது இந்த படத்தின் OTT வெளியிட்டு தகவல் வெளியாகியுள்ளது அதாவது இந்த படம் மே இறுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது மேலும் இந்த படம் , மே 31, 2025 யில் JioHotstar யில் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டுள்ளது மேலும் இப்படம் குடும்பம் திரைப்படம் என்பதால் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கலாம்.
மில்லியன் டாலர் புரொடக்ஷன்ஸ் தயாரித்த இந்தப் படத்தில் சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஜெகன், ரமேஷ் திலக், இளங்கோ குமாரவேல், எம்.எஸ். பாஸ்கர், கமலேஷ் ஜெகன், ஸ்ரீஜா ரவி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவி சட்டவிரோதமாக தஞ்சம் புகுந்த ஒரு இலங்கை தமிழ் குடும்பத்தைச் சுற்றி வருகிறது. இருப்பினும், தொடர்ச்சியான நிகழ்வுகள் அந்தக் குடும்பத்தைப் பற்றி காவல்துறையினர் விசாரிக்க வழிவகுக்கிறது. சூர்யாவின் ரெட்ரோவுடன் இந்தப் படம் வெளியானபோதும், டூரிஸ்ட் ஃபேமிலி உலகளவில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
இதையும் படிங்க இந்த வாரம் OTT கலக்க வரும் மாஸ் மூவீ லிஸ்ட்டில் என்ன இருக்கிறது என பார்க்கலாம் வாங்க