இன்று Good bad Ugly மாஸ் ரிலீஸ் தல ரசிகர்கள் கொண்டாட்டம்

Updated on 10-Apr-2025

ஏப்ரல் 10 ஆன இன்று தல அஜித் குமார் நடிக்கும் Good bad Ugly இன்று தியேட்டரில் ரிலீஸ் ஆகியது மேலும் இப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகும். மேலும் மக்கள் அதி காலை முதல் திரையரங்குகளில் தங்களின் மகிழ்ச்சியை கொண்டடி வருகிறார்கள் மேலும் இப்படம் அதிகம் மிக பெரிய அளவில் வெற்றி பெரும் என எதிர்ப்பர்க்கபடுகிறது மேலும் பல தகவல் பார்க்கலாம் வாங்க.

Good bad Ugly இன்று ரிலீஸ்

நீண்ட காலத்திற்கு ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்தார் அஜித். இதில் கடந்த பிப்ரவரி மாதம் விடாமுயற்சி ரிலீசானது தல அஜித் குமாரின் விடாமுயற்சிக்கு பிறகு இப்பொழுது குட் பேட் அகலி திரைப்படம் ஏப்ரல் 1௦ ஆன இன்று தியேட்டரில் ரிலீஸ் ஆகியது மேலும் இப்படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக த்ரிஷா கிருஷ்ணன் நடித்துள்ளார் இதை தவிரஇந்தப் படத்தில் பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில், ராகுல் தேவ், யோகி பாபு, ஷைன் டாம் சாக்கோ, ஜாக்கி ஷெராஃப், பிரியா பிரகாஷ் வாரியர் மற்றும் ரகு ராம் உள்ளிட்ட வலுவான துணை நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர் மேலும் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.இதனுடன் படம் வெகுஜன ஈர்ப்பு மற்றும் நடிப்பு சார்ந்த தருணங்களின் கலவையை உறுதியளிக்கிறது.

இதற்க்கு முன்னதாக குட் பேட் அகலி டீசர் ரசிகர் மத்தியில் அதிக வரவேற்ப்பு பெற்று தந்தது அதனை தொடர்ந்து இந்த டீசரில் பழைய ரெபரன்ஸ்கள் ஸ்டைலிஸ் look ஆகியவை மக்களை கவர்ந்தது டீசரே இப்படி இருக்கே படம் எப்படி இருக்கும் என மக்கள் பெரும் அளவில் இந்த படத்தை கொண்டாடி வருகிறார்கள் மேலும் இப்படம் அதிகம் வசூலை பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

Good bad Ugly ரசிகர்கள் கொண்டாட்டம்

உலககெங்கிலும் குட் பெட் அகலி திரைப்படம் வெளி ஆகி மிக பெரிய வரவேற்ப்பை கொண்டு வருகிறது மேலும் இதை ரசிகர்கள் ட்விட்டர் X பக்கத்தில் ரசிகர்களை தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் இப்படத்தை பாரதத ரசிகர் முதல் பாகம் சிறப்பாகவும் இதன் இரண்டாவது பாகம் அதவிட பிரமாதமாக இருப்பதாக X பக்கத்தில் தெரிவித்தார், மேலும் இந்த படம் ஒரு புது வித நடிப்பில் மிக சிறந்த கலவையாகும் மேலும் ஒருவர் அஜித் ரசிகர்களுக்கு சிறப்பாகவும் மற்ற பார்வையாளர்களுக்கு பேட் ஆக இருக்கும் என மேலும் ஒருவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க This Week Tamil OTT Movies: இந்த வாரம் OTT கலக்க வரும் மாஸ் படங்கள் லிஸ்ட் இதோ

இதனுடன் இன்னும் சிலர் இப்படத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படி ஒரு படத்தை பார்த்து ரசித்ததாக தெரிவித்தார்

மேலும் இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் என்று ரசிகர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :