Vidamuyarchi:தல அஜித் ரசிகர்களுக்கு மஜாவான செய்தி தியேட்டரை அதரவைக்க வரும் விடாமுயற்ச்சி இந்த தேதியில் ரிலீஸ்

Updated on 23-Jan-2025

Vidamuyarchi: தென்னிந்தியா திரை உலகில் தல என அழைக்கப்படும் முன்னணி நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் தியேட்டரில் ரிலிசாக தயாராகிவிட்டது இந்த திரைப்படம் பிப்ரவரி 6ம் தேதி தியேட்டரில் பட்டய கிளப்ப வருகிறது தமிழ்நாட்டில் தல, தளபதி ரசிகர்கள் அதிகம் என்பதால் மக்கள் இந்த திரைப்படத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிறார்கள் இப்படத்தின் முழு விவரம் பார்க்கலாம்.

விடாமுயற்சி ரிலீஸ் தகவல்

முன்னணி பிரபல நடிகர் தல அஜித் நடிக்கும் விடாமுயற்ச்சி மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளி வருகிறது , இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படம் லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் அடுத்த மாதம் பிப்ரவரி 6-ம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆகிறது. மேலும் இப்பொழுது ட்விட்டர் X பக்கத்திலும் லைக்கா ப்ரோடேக்சன் ட்வீட் செய்துள்ளதை நீங்கள் இங்கு கீழே பார்க்கலாம்.

படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் ப்ரீ புக்கிங் மாஸாக நடந்து வருகிறது. ஓவர்சீஸில் இதுவரை படம் 30 முதல் 50k கலெக்ஷன் செய்துள்ளதாக கூறப்படுகிறது.இதை தவிர விடாமுயற்ச்சி திரைப்படத்தின் ட்ரைலர் மக்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது, மேலும் இப்படத்தின் கதாநாயகியான திரிஷா நீண்ட நாட்கள் பிறகு நடித்துள்ளார் அஜித், த்ரிஷா இருவரும் கடந்த 2005யில் ‘ஜீ’ திரைப்படத்தில் முதல் முறையாக ஜோடியாக நடித்தனர். ஜீ திரைப்படம் 2005ஆம் ஆண்டு பொங்கல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் பல்வேறு காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டு பின்னர், பிப்ரவரி மாதம் வெளியானது,

அதே போல் இருவரும் சேர்ந்து ’கிரீடம்’, ’மங்காத்தா’, ’என்னை அறிந்தால்’ ஆகிய படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ‘என்னை அறிந்தால்’. இந்த படமும் 2015ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் தள்ளி வைக்கப்பட்டு, அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது அந்த வகையில் விடாமுயாச்சி அதே போல இது 2025 ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகிறது. மேலும் இப்படத்திற்க்கு மக்கள் மிகவும் ஆரவத்துடன் இருக்கிறார்கள் மேலும் இதில் ட்விஸ்ட் 2005,2015 மற்றும் இப்பொழுது அதே பிப்ரவரி மாதம் 2025 என்பது தான் இந்த வித்தியாசமான ஒற்றுமை ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தை பிப்ரவரி 6 தேதி நண்ம்பர்கள் மற்றும் கொடுத்ததுடன் தியேட்டரில் பார்த்து மகிழுங்க

இதையும் படிங்க Dragon Postponed:தல வந்த தள்ளி போய் தான் ஆகணும் பிரதீப் ரங்கநாதனின் Dragon திரைப்படம் தள்ளிவைக்கப்பட்டது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :