whatsapp banned
WhatsApp உலகளவில் அதிக மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள், இது எவ்வளவு பாப்புலராக இருக்கிறது அந்த அளவுக்கு இதன் செக்யூர்டியில் நாளுக்கு நாள் பலப்படுத்தப்படுகிறது, போலி கணக்குகள், ஸ்பேம் பாட்கள், தவறான தகவல்களைப் பரப்பும் பயனர்கள் மற்றும் ப்ரைவசி மீறும் செயல்பாடுகளை நிறுவனம் தொடர்ந்து கண்காணிக்கிறது. பல நேரங்களில் பயனர்கள் தங்கள் சிறிய தவறு கூட வாட்ஸ்அப்பின் சேவை விதிமுறைகளின்படி கடுமையான மீறலாகக் கருதப்படுவதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. எனவே நீங்கள் எதாவது தவறாக செய்வதை கண்டால் அதை கண்காணித்து கண்டு உங்களுக்கு நோட்டிஸ் அனுப்படும்
உங்கள் தினசரி அரட்டை, வேலை, ஆவணங்கள் அல்லது வணிகத்திற்காக நீங்கள் WhatsApp ஐப் பயன்படுத்தினால், இந்த 5 தவறுகளைச் செய்யவே கூடாது, இல்லையெனில் உங்கள் கணக்கை ஒருபோதும் திரும்பப் பெற முடியாத அபாயம் உள்ளது.
ஒரு பயனர் சேமிக்கப்படாத நம்பர்களை , மீண்டும் மீண்டும், தானாக உருவாக்கப்பட்ட மெசேஜ்களை அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு அனுப்பினால், WhatsApp இந்த ஸ்பேம்/துஷ்பிரயோக நடத்தையைக் கருதுகிறது. அத்தகைய அக்கவுண்ட்கள் நேரடியாக நிரந்தர தடை லிஸ்ட்டில் வைக்கப்படும்.
இதையும் படிங்க: தமிழ்நாடு எலெக்ஷன் அருகில் வந்தாச்சு SIR பார்மை ஆன்லைனில் எப்படி நிரப்புவது
உங்கள் மெசேஜ்கள் மீண்டும் மீண்டும் புகாரளிக்கப்பட்டாலோ அல்லது தடை செய்யப்பட்டாலோ, WhatsApp அதை சமூகப் பாதுகாப்பை மீறுவதாகக் கருதுகிறது. மீண்டும் மீண்டும் புகார்கள் வந்தால், WhatsApp உங்கள் அக்கவுண்டை எச்சரிக்கை இல்லாமல் தடை செய்யும் .
இந்த வகையான மெசேஜ்கள் கடுமையான “ஜீரோ சகிப்புத்தன்மை கொள்கையின்” கீழ் வருகின்றன:
இதுபோன்ற எந்தவொரு செயலுக்கும் வாட்ஸ்அப் உடனடியாக நிரந்தரத் தடை விதிக்கலாம்.
வேறொருவரின் அடையாளத்தைப் பயன்படுத்தி ஒரு அக்கவுண்டை உருவாக்குவது, ஒரு நிறுவனம்/பிராண்ட்/தனிநபரின் பெயரைத் தவறாகப் பயன்படுத்துவது அல்லது அதிகாரியாகக் காட்டிக் கொள்வது அனைத்தும் WhatsApp பாலிசிகளுக்கு எதிரானது. பிடிபட்டால், உங்கள் அக்கவுன்ட் நிரந்தரமாக நீக்கப்படலாம்.