Vivo X300 FE vs iPhone 17
Vivo சமிபத்தில் அதன் Vivo X300 FE போனை அறிமுகம் செய்தது, இந்த போனுக்கு சரியான போட்டியை தரும் வகையில் iPhone 17 கொண்டு வந்துள்ளது, அதாவது இந்த இரு போனையும் ஒப்பிட்டு எது பெஸ்ட் ன்பதை பார்க்கலாம், ஐபோன் 17, ஆப்பிள் A19 பிராசஸருடன் வருகிறது. இதை ஒப்பிட உண்மையான காரணம் இந்த போன் கிட்டத்தட்ட ஐபோனுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இருக்கிறது மேலும் இந்த இரு போனையும் ஒப்பிட்டு எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.
விவோ X300 FE ஆனது 1216×2640 பிக்சல்கள் ரெசல்யூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 5,000 நிட்ஸ் ஹை ப்ரைட்னஸ் கொண்ட 6.31-இன்ச் LTPO AMOLED ஃபுல் HD+ AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. ஐபோன் 17 ஆனது 2622×1206 பிக்சல்கள் ரெசல்யூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3,000 நிட்ஸ் உச்சபட்ச பிரகாசம் கொண்ட 6.3-இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.
Vivo X300 FE குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 ப்டோசெஸ்ரால் இயக்கப்படுகிறது, அதே சமயம் ஐபோன் 17 ஆப்பிள் A19 ப்ரோசெசரில் இயக்கப்படுகிறது.
விவோ X300 FE, ஆண்ட்ராய்டு 16-ஐ அடிப்படையாகக் கொண்ட ஆரிஜின்ஓஎஸ் 6-இல் இயங்குகிறது. ஐபோன் 17, ஐஓஎஸ் 26 இயங்குதளத்தில் இயங்குகிறது.
Vivo X300 FE ஆனது, f/1.57 அப்ரட்ஜர் கொண்ட 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது மற்றும் முன்புறத்தில் விவோ X300 FE, செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 50 மெகாபிக்சல் முன்பக்க கேமராவைக் கொண்டுள்ளது. iPhone 17 ஆனது, f/1.78 அப்ரட்ஜர் கொண்ட 48 மெகாபிக்சல் முதன்மை ஃபியூஷன் கேமரா மற்றும் பின்புறத்தில் f/2.2 அப்ரட்ஜர் கொண்ட 48 மெகாபிக்சல் ஃபியூஷன் அல்ட்ரா-வைட் கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது மற்றும் ஐபோன் 17, செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக f/1.9 அப்ரட்ஜர் கொண்ட 18 மெகாபிக்சல் முன்பக்க கேமராவைக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க:Window AC vs Desert Air Cooler எது பெஸ்ட் ? கூலிங், மின்சாரம் எல்லாத்திலேயும் சிறப்பானது எது
விவோ X300 FE ஆனது 150.83 mm நீளம், 71.76 mm அகலம், 7.99 mm திக்னஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது மற்றும் 191 கிராம் எடை உடையது.ஐபோன் 17 ஆனது 71.5 மிமீ அகலம், 149.6 மிமீ உயரம், 7.95 mm ஆழம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதோடு, 177 கிராம் எடையையும் கொண்டுள்ளது.
விவோ X300 FE-ன் 12GB/256GB ஸ்டோரேஜ் வேரியன்ட் ரூ,79,999 விலையிலும் , 12GB/512GB ஸ்டோரேஜ் வேரியன்ட் ₹89,999 விலையிலும் கிடைக்கிறது.. ஐபோன் 17-ன் 256GB ஸ்டோரேஜ் வேரியன்ட் ரூ82,900 விலையிலும் , 512GB ஸ்டோரேஜ் வேரியன்ட் ரூ102,900 விலையிலும் கிடைக்கிறது.