Xiaomi இந்தியாவில் அறிமுகம் செய்துது 12,999 அசத்தலான Smart TV

Updated on 23-May-2024
HIGHLIGHTS

இந்திய ஸ்மார்ட்டிவி சந்தையில் Xiaomi அதன் அசத்தலன் டிவி அறிமுகம் செய்தது,

நிறுவனம் Xiaomi Smart TV A Series 2024 பதிப்பை அறிவித்துள்ளது

சியோமி டிவிக்கள் 32 இன்ச், 40 இன்ச் மற்றும் 43 இன்ச் திரை அளவுகளில் வருகின்றன.

இந்திய ஸ்மார்ட்டிவி சந்தையில் Xiaomi அதன் அசத்தலன் டிவி அறிமுகம் செய்தது, நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் அதன் லைனில் ரெப்ராஸ் செய்து ஒவ்வொரு இன்ச் அளவிற்கும் ஏதாவது ஒன்றைக் கொண்டுவருகிறது.இப்போது நிறுவனம் Xiaomi Smart TV A Series 2024 பதிப்பை அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் டிவியின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாக இருக்கலாம். புதிய சியோமி டிவிக்கள் 32 இன்ச், 40 இன்ச் மற்றும் 43 இன்ச் திரை அளவுகளில் வருகின்றன. ஆரம்ப விலை ரூ.12999 மட்டுமே. புதிய சியோமி ஸ்மார்ட் டிவியை Amazon மற்றும் Xiaomi India வெப்சைட்டில் வாங்கலாம்.

Xiaomi Smart TV A Series 2024 Price

Xiaomi Smart TV A Series 2024 யின் ஆரம்ப விலை ரூ.12,999. இவை 32 இன்ச் மாடலின் விலைகள். 40 இன்ச் மாடலின் விலை ரூ.22999, 43 இன்ச் சியோமி டிவியின் விலை ரூ.24999. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட் மற்றும் Amazon India ஆகியவற்றிலிருந்து இவற்றை வாங்கலாம்.

#Xiaomi Smart TV

Xiaomi Smart TV A Series 2024 சிறப்பம்சம்

Xiaomi Smart TV A தொடர் கடந்த ஆண்டை விட சில மாற்றங்களுடன் கொண்டுவரப்பட்டுள்ளது. நிறுவனம் 40 மற்றும் 43 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட மாடல்களில் குவாட் கோர் கார்டெக்ஸ் ஏ55 செயலியை நிறுவியுள்ளது, அதே நேரத்தில் 32 இன்ச் மாடலில் கார்டெக்ஸ் A35 மாடல் உள்ளது.

புதிய சியோமி டிவியில் Xiaomi TV+ நன்மை வழங்கப்படுகிறது, இதில் பயனர்களுக்கு 150க்கும் அதிகமான லைவ் சேனல் அக்சஸ் பெறலாம். இதில் 32-இன்ச் மாடலில் 1366 x 768 பிக்சல்கள் கொண்ட HD ரேசளுசன் உள்ளது, மற்ற இரண்டு மாடல்கள் FHD ரேசளுசனை வழங்குகின்றன.

#Xiaomi Smart TV

TV A சீரிச்ல் உள்ள அனைத்து Xiaomi TVகளும் 60Hz ரெப்ராஸ் ரெட்டை வழங்குகின்றன. 32 இன்ச் மாடலில் 1 ஜிபி ரேம் மற்றும் மற்ற இரண்டு மாடல்களில் 1.5 ஜிபி ரேம் உள்ளது. ஸ்டோரேஜ் 8 ஜிபி ஆகும், இதனால் பயனர்கள் தங்களுக்குப் பிடித்த ஆப்களை இன்ஸ்டால் செய்வதை இது எளிதாக்குகிறது.

புதிய Xiaomi TVகள் Patchwall+ உடன் வந்து Google TV (Android TV 11) இல் இயங்குகின்றன. இது 20W ஒலி வெளியீட்டைக் கொண்டுள்ளது, இது Dolby Audio மற்றும் DTS:X சப்போர்டை வழங்குகிறது. புளூடூத் 5.0 இணைப்பு விருப்பமாக கிடைக்கிறது. 2 HDMI போர்ட்கள், WiFi, USB 2.0 மற்றும் ஈதர்நெட் போர்ட் வழங்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க Sony Bravia 2 TV இந்தியாவில் அறிமுகம் 4K Ultra HD LED டிஸ்ப்ளே இருக்கும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :