amazon gif 2023
Amazon Great Indian Festival Sale அனைவருக்கும் தொடங்கியுள்ளது. இன்று அக்டோபர் 8, 2023, இப்போது அனைவரும் விற்பனையில் பங்கேற்கலாம். நீங்கள் நீண்ட நாட்களாக ஸ்மார்ட்வாட்ச் வாங்க விரும்பினால் இந்த சேலை பயன்படுத்தி வாங்கலாம். இதேபோல், அமேசான் சில கவர்ச்சிகரமான ஸ்மார்ட்வாட்ச்களை அற்புதமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுடன் பட்டியலிட்டுள்ளது. 5 சிறந்த ஸ்மார்ட்வாட்ச்களின் டீல்களை இங்கே பார்க்கலாம்.
Samsung Galaxy Watch 4 ஆனது 450 x 450 பிக்சல்கள் ரேசளுசன் கொண்ட 1.4 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் DX+ உடன் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 1.5ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட எக்ஸினோஸ் டபிள்யூ920 ப்ரோசெசரில் இயங்குகிறது. இது WearOS இல் வேலை செய்கிறது ஆனால் OneUI வாட்ச் 5க்கு மேம்படுத்தலாம். அமேசானில் ரூ.9,999க்கு கிடைக்கிறது.
இந்த ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச் 1.78 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 448 x 368 பிக்சல் ரெசல்யூஷனுடன் வருகிறது. இது அயன்-எக்ஸ் கண்ணாடியால் பாதுகாக்கப்படுகிறது. இது வாட்ச்ஓஎஸ் 9.0 யில் இயங்குகிறது ஆனால் வாட்ச்ஓஎஸ் 10க்கு மேம்படுத்தலாம். 1ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ள இந்த சாதனத்தில் ஆப்பிள் எஸ்8 சிப்செட்டை நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. பேட்டரியைப் பற்றி பேசுகையில், இந்த கடிகாரத்தில் 296mAh செல் உள்ளது. அமேசான் விற்பனையின் போது இந்த ஸ்மார்ட்வாட்ச் தள்ளுபடி விலையில் ரூ.21,999 யில் கிடைக்கிறது.
இந்த ஃபயர்-போல்ட் ஸ்மார்ட்வாட்ச்சில் துருப்பிடிக்காத எஃகு பட்டா உள்ளது. இது 1.43 இன்ச் AMOLED டிஸ்ப்ளே மற்றும் IP68 ரேட்டிங்கில் வருகிறது. இந்த டாகர் லக்ஸ் வாட்ச் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 400எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது இதை ரூ.3,299க்கு வாங்கலாம்.
இதையும் படிங்க : GIF 2023: இன்று இந்த போன்களில் கிடைக்கிறது அதிரடி டிஸ்கவுன்ட்
Noise வழங்கும் இந்த ஸ்மார்ட்வாட்ச் 368 x 448 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 1.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த சாதனத்தை ஒரு முறை சார்ஜ் செய்த பிறகு 7 நாட்களுக்குப் பயன்படுத்தலாம் என்று பிராண்ட் உறுதியளிக்கிறது. இந்த வாட்ச் புளூடூத் காலிங் வசதியையும் வழங்குகிறது. அமேசான்GIF Sale-ல் வாங்கினால் ரூ.2,099-க்குவாங்கி செல்லலாம்.