BSNL நிறுவனம் ரூ. 129 விலையில் புதிதாக சினிமா பிளஸ் சேவையை அறிமுகம் செய்து உள்ளது
BSNL அறிமுக சலுகையாக மாதம் ரூ. 129 விலையில் வழங்கப்படுகிறது.
BSNL சினிமா பிளஸ் சேவையை வழங்க பிஎஸ்என்எல் நிறுவனம் டிவியுடன் இணைந்து உள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 129 விலையில் புதிதாக சினிமா பிளஸ் சேவையை அறிமுகம் செய்து உள்ளது. இந்த சேவையில் சோனிலிவ் மற்றும் வூட் செலக்ட் போன்ற ஒடிடி தளங்களை இயக்குவதற்கான சந்தா வழங்கப்படுகிறது.
புதிய சேவைக்கான மாத கட்டணம் ரூ. 199 ஆகும். எனினும், அறிமுக சலுகையாக மாதம் ரூ. 129 விலையில் வழங்கப்படுகிறது. பிஎஸ்என்எல் சினிமா பிளஸ் சேவையில் மொத்தம் 300-க்கும் அதிக டிவி சேனல்கள் மற்றும் 8 ஆயிரத்திற்கும் அதிக திரைப்படங்களை இயக்கும் வசதி வழங்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் சினிமா பிளஸ் சேவையில் இணைய தரவுகளை கணினி, மொபைல் சாதனங்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிக்களில் பார்த்து ரசிக்க முடியும். இத்துடன் ஒவ்வொரு பயனருக்கு ஏற்ற வகையில் தனிப்பட்ட பரிந்துரைகள் வழங்கப்படுகிறது.
சினிமா பிளஸ் சேவையை வழங்க பிஎஸ்என்எல் நிறுவனம் டிவியுடன் இணைந்து உள்ளது. இந்த சேவையில் சோனிலிவ் ஸ்பெஷல், வூட் செலக்ட், யப் டிவி பிரீமியம் மற்றும் ஜீ5 பிரீமியம் போன்ற தளங்களை இயக்கும் வசதி வழங்கப்படுகிறது. இந்த சேவை யப் டிவி ஸ்கோப் மூலம் வழங்கப்படுகிறது
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.