Nothing புதிய CMF Phone 2 Pro அறிமுகம் இதன் டாப் அம்சம் மற்றும் விலை தகவல் பாருங்க

Nothing புதிய CMF Phone 2 Pro அறிமுகம் இதன் டாப் அம்சம் மற்றும் விலை தகவல் பாருங்க

Nothing இன்று அதன் CMF Phone 2 Pro போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, இதனுடன் இதில் of CMF Buds and Buds Pro 2, Neckband Pro, Watch Pro 2 ஆகியவற்றை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது மேலும் இது கடந்த ஜெனரேசன் CMF Phone 1 யின் மிக சிறந்த வெற்றியை தொடர்ந்து இதை அறிமுகம் செய்யப்பட்டது மேலும் இந்த CMF Phone 2 Pro போனில் மூன்று பின்புற கேமரா மற்றும் இதில் MediaTek Dimansitty 7300 Pro சிப்செட் வழங்கப்படுகிறது மேலும் இதன் டாப் சுவாரஸ்ய அம்சங்கள் மற்றும் விலை தகவலை பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

CMF Phone 2 Pro டாப் அம்சங்கள்

டிசைன் :- CMF Phone 2 Pro மிகவும் ஈர்க்ககொடிய டிசைனில் இருக்கிறது, மேலும் இந்த போனில் டெப்த் 7.8 mm, நீளம் 164 mm உடன் இதன் பாடி அல்ட்ரா லைட் பாடி இதன் அகலம் 78 mm இருக்கிறது, இதனுடன் இதன் இடை 185g ஆகும் மேலும் இந்த Phone 2 Pro ஸ்லம்மஸ்ட் டிசைன் கொண்டுள்ளது மற்றும் இதன் கேமரா சுற்றி அலுமினியம் பிரேம் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இதன் டிசைன் முந்தைய ஜெனரேசன் போலவே இருக்கிறது மேலும் இந்த CMF Phone 2 Proஒரு நான்கு White, Black, Orange மற்றும் Light Green ஆகிய கலர்கள் ஆகும்

டிஸ்ப்ளே :-

இந்த போனின் டிஸ்ப்ளே பற்றி பேசினால் இதில் 6.77″ FHD+ flexible AMOLED டிஸ்ப்ளே உடன் HDR சப்போர்ட்டுடன் 1080
x 2392 பிக்சல் ரெசளுசனுடன் மற்றும் 120 Hz ரெப்ரஸ் ரேட்டுடன் வருகிறது மேலும் இதில் 3000 nits ப்ரைட்னஸ் சப்போர்ட் செய்கிறது.

ப்ரோசெசர் :-

இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் MediaTek Dimensity 7300 Pro 5G 8-core up to 2.5 GHz கிளாக் ஸ்பீடில் இயங்குகிறது மேலும் இது Nothing OS 3.2 (பவரின் கீழ் Android 15) அடிபடையில் இயங்குகிறது மேலும் இதில் 3 ஆண்டு ஆண்ட்ரோய்ட் அப்டேட் மற்றும் 6 ஆண்டு செக்யூரிட்டி பெட்சஸ் ஆகியவை வழங்குகிறது.

ரேம் ஸ்டோரேஜ்

மேலும் இதில் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் பற்றி பேசுகையில் 8 GB + 128 GB
8 GB + 256 GB ஸ்டோரேஜ் வழங்குகிறது மேலும் இதன் ஸ்டோரேஜை 2 TB வரை அதிகரிக்க முடியும்.

கேமரா

இப்பொழுது கேமரா அம்சங்கள் பற்றி பேசுகையில் இதில் 50 MP மெயின் கேமரா f/1.88 அப்ரட்ஜர், டெலிபோட்டோ இதில் 50MP செகண்டரி கேமரா உடன் இது f/1.85 அப்ராஜர் கொண்டுள்ளது மற்றும் இதில் மூன்றாவதாக 8 MP அல்ட்ரா வைட் கேமரா உடன் f/2.2 அப்ரட்ஜர் கொண்டுள்ளது மற்றும் இதில் செல்பிக்கு 16 MP முன் பக்கத்தில் இருக்கிறது இதனுடன் இதில் f/2.45 அப்ரட்ஜர் கொண்டுள்ளது . மேலும் இதில் 4K ரெகார்டிங் 30 FPS எடுக்க முடியும் EIS இமேஜ் ஸ்டேப்ளைசெசன் எடுக்க முடியும்.

பேட்டரி:-

மேலும் இந்த போனில் பேட்டரியை பற்றி பேசுகையில் 5000 mAh பேட்டரியுடன் 33W பாஸ்ட் சார்ஜிங் 5W ரிவர்ஸ் சார்ஜிங் வழங்கப்படுகிறது.

கனெக்டிவிட்டி :-

மேலும் இந்த போனில் கனேக்ட்டிவிட்டி பற்றி பேசுகையில் இதில் Dual SIM சப்போர்ட் வழங்குகிறது,மேலும் இதில் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்படுகிறது. 4G LTE bands அட்வான்ஸ்ட், Gigabit 5G Dual Mode ஆகிய சப்போர்ட் வழங்குகிறது

CMF Phone 2 Pro விலை தகவல்

இந்தியாவில் CMF போன் 2 ப்ரோவின் தொடக்க விலை ரூ. 8GB + 128GB மாறுபாட்டிற்கு 18,999. அதேசமயம் 8GB + 256GB மாடல் ரூ.20,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மே 5, 2025 முதல் ஆன்லைன் தளமான பிளிப்கார்ட், நத்திங்ஸ் இ-ஸ்டோர், குரோமா, விஜய் சேல்ஸ் மற்றும் நாடு முழுவதும் உள்ள முன்னணி சில்லறை விற்பனைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும். அறிமுக சலுகையாக, பிளிப்கார்ட் ரூ.1,000 எக்ஸ்சேஞ்ச் சலுகையை வழங்குகிறது, இதன் மூலம் ஸ்மார்ட்போனின் விலை முறையே ரூ.17,999 மற்றும் ரூ.19,999 ஆகக் குறைக்கப்படுகிறது.

CMF பட்ஸ் 2 சீரிஸ் அம்சங்கள்

CMF பட்ஸ் 2 11மிமீ PMI இயக்கிகள், 48dB ஹைப்ரிட் ANC, ஸ்பேஷியல் ஆடியோ மற்றும் 55 மணிநேர பேட்டரி ஆயுள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது AI-இயக்கப்படும் அழைப்பு தெளிவு மற்றும் நேர்த்தியான மணல் பிளாஸ்டட் மேட் வடிவமைப்பை வழங்குகிறது. மறுபுறம், பட்ஸ் 2 பிளஸ் உயர்-ரெஸ் LDAC ஆடியோ, 12mm LCP இயக்கிகள், 50dB ஹைப்ரிட் ANC, தனிப்பட்ட ஒலி மற்றும் 61.5 மணிநேரம் வரை விளையாடும் நேரத்தைக் கொண்டுள்ளது. இரண்டு தயாரிப்புகளும் அதிவேக சார்ஜிங், குறைந்த தாமத கேமிங் மற்றும் தனிப்பயனாக்குதல் புதுப்பிப்புகளுடன் வருகின்றன.

CMF பட்ஸ் 2 சீரிஸ் விலை

இந்தியாவில் CMF பட்ஸ் 2a விலை ரூ.2199 ஆகவும், பட்ஸ் 2 விலை ரூ.2699 ஆகவும் உள்ளது. இது தவிர, பட்ஸ் 2 பிளஸ் இந்தியாவில் ரூ.3299க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo