MediaTek Dimensity 7300 ப்ரோசெஸருடன் Vivo யின் புதிய போன் அறிமுகம் டாப் அம்சம்
Vivo இன்று அதன் புதிய Vivo V50e 5G போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. மேலும் இது Vivo V40e யின் அப்க்ரேட் வெர்சன் ஆகும், மேலும் விவோ அதன் V50 சீரிஸில் டிஸ்ப்ளே,பர்போமான்ஸ், கேமரா டிசைன் மற்றும் பேட்டரி லைப் போன்றவற்றில் அப்டேட் செய்துள்ளது மேலும் இதன் முழு அம்சம் மற்றும்விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyVivo V50e 5G விலை மற்றும் விற்பனை தகவல்
Vivo V50e 5G யின்8GB மற்றும் 128GB ஸ்டோரேஜ் ஆரம்ப விலை ரூ,28,999 ஆகும், அதுவே அதன் 8GB மற்றும் 256GB ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ,30,999ஆகும் மேலும் இதன் விற்பனை ஏப்ரல் 17 அன்று இ-காமர்ஸ் தலமான flipkart மற்றும் Vivo ஸ்டோரில் வாங்கலாம் இதனுடன் இதில் 10% பேங்க் ஆபர் மற்றும் 10% எக்ஸ்சேஞ் ஆபர் போன்ற பல நன்மைகள் வழங்கப்படுகிறது மேலும் கஸ்டமர் இதை Sapphire Blue மற்றும் Pearl White ஆகிய இரண்டு கலரில் வாங்கலாம்.
Vivo V50e 5G யின் டாப் அம்சம்
டிஸ்ப்ளே :-Vivo V50e 5G யின் டிஸ்ப்ளே பற்றி பேசினால், 6.77-inch AMOLED பேணல் உடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் HDR10+ சப்போர்ட் இதனுடன் இதில் 1800 nitsபீக் ப்ரைட்னஸ் இதனுடன் இதில் Schott டைமென்ட் ஷீல்ட் கிளாஸ் ப்ரோடேக்சன் வழங்கப்படுகிறது.
ப்ரோசெசர்:-இப்பொழுது இந்த போனில் MediaTek Dimensity 7300 சிப்செட்டுடன் இதில் Mali G615 GPU உடன் வருகிறது மேலும் இது Android 15 அடிப்படையின் கீழ் FunTouchOS 15 சப்போர்ட் செய்கிறது

ரேம் ஸ்டோரேஜ்:- இந்த விவோ 5ஜி போன் 8 ஜிபி ரேம் உடன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 8 ஜிபி அதிகரிக்ககூடிய ரேம் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது, இது 8 ஜிபி மெய்நிகர் ரேமை 8 ஜிபி இயற்பியல் ரேமுடன் சேர்ப்பதன் மூலம் 16 ஜிபி ரேமின் (8 ஜிபி + 8 ஜிபி) சக்தியை வழங்குகிறது. இது LPDDR4X RAM தொழில்நுட்பம். சந்தையில், இதை 128 ஜிபி மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வாங்கலாம். இது UFS 2.2 ஸ்டோரேஜ் தொழில்நுட்பம் கொண்டுள்ளது.
கேமரா:- இப்பொழுது கேமரா அம்சங்கள் பற்றி பேசினால் V50e 5G ஆனது 50MP சோனி IMX882 பிரைமரி ஷூட்டரை OIS உடன் 8MP அல்ட்ராவைடு சென்சார் உடன் பெறுகிறது. முன்பக்கத்தில், ஸ்மார்ட்போன் 4K ரெக்கார்டிங் கொண்ட 50MP செல்ஃபி ஷூட்டருடன் இது 4K ரெக்கார்டிங் செய்யும்
பேட்டரி:-இப்பொழுது இந்த போனில் பேட்டரிக்கு வரும்போது இதில் 5,600 mAhபேட்டரி உடன் 90W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்யும் இதனுடன் இது 3 வருட ஆண்ட்ரோய்ட் அப்டேட் மற்றும் 4 ஆண்டு செக்யுரிட்டி அப்டேட் ஆகியவை கிடைக்கும்
இப்பொழுது கனெக்டிவிட்டி பற்றி பேசுகையில் Bluetooth 5.4,இன்டிச்ப்லே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்குகிறது.
இதையும் படிங்க Realme Narzo 80 Pro மற்றும் Narzo 80x அறிமுகம் கேமிங் பிரியர்களுக்காக அதிநவீன அம்சங்கள் கொண்டிருக்கும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile