அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், டேட்டா மற்றும் DTH இலவசமாக வேண்டுகோள்

HIGHLIGHTS

ஊரடங்கு காலக்கட்டத்தில் சேவையை இலவசமாக வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், டேட்டா மற்றும் DTH இலவசமாக வேண்டுகோள்

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தற்சமயம் அது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் மே 3 ஆம் தேதி வரை பொது மக்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், டேட்டா, டிடிஹெச் போன்றவை இலவசமாக வழங்க மத்திய அரசு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

அதன்படி, அரசு மற்றும் டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்டவை டிடிஹெச் சேவை வழங்குவோரிடம் போடப்பட்டுள்ள ஒப்பந்தங்களில் தேவையான மாற்றங்களை மேற்கொண்டு, ஊரடங்கு காலக்கட்டத்தில் சேவையை இலவசமாக வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த மனுவில் ஊரடங்கு காரணமாக பொது மக்கள் மனரீதியில் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொள்ள உத்தரவிட கோரப்பட்டுள்ளது. 

இத்துடன் வீடியோ ஸ்டிரீமிங் வலைதளங்களும் தங்களது சேவையை ஊரடங்கு முடியும் வரை இலவசமாக வழங்க சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

விரும்பியவருடன் வாய்ஸ் அல்லது வீடியோ கால் செய்வது, பொழுதுபோக்கிற்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வீடியோ ஸ்டிரீமிங் வலைதளங்களை பார்ப்பதன் மூலம் மக்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் வெகுவாக குறைக்கப்படும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் work from home மூலம் வேலை பார்ப்பவர்களுக்கு தேவையான டேட்டா கிடைப்பதில்லை, இதனுடன் இ;லவச டேட்டா மெல்லாம் இந்த பிரச்சனைக்கு ஒரு வழி பிறக்கும். இதனுடன் ஊரடங்கு இருக்கும் இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் வெளியில் போய் ரீச்சார்ஜ் செய்வது கடினம் எனவே அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், டேட்டா, டிடிஹெச் போன்றவை இலவசமாக வழங்க மத்திய அரசு கோரிக்கை கொடுக்கப்பட்டுள்ளத

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo