குறைந்த விலையில் அதிக டேட்டா கிடைக்கும் நாடு எது தெரியுமா வாங்க பார்க்கலாம்

HIGHLIGHTS

செல்போன் நெட்வொர்க் நிறுவனங்கள் வழங்கும் ஆஃபர்களின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..

குறைந்த விலையில்  அதிக  டேட்டா கிடைக்கும்  நாடு எது  தெரியுமா  வாங்க  பார்க்கலாம்

இந்திய  டெலிகாம்  துறையில்  ஜியோ 2016 ஆம் ஆண்டு  காலடி  வைத்ததிலிருந்து தான்  ஏகப்பட்ட புத்தம் புதிய  ஆபர்கள் வர ஆரம்பித்தது  அதாவது  ஒரு காலத்தில்  3G  மட்டும் பயன்படுத்து கொண்டிருந்தோம், ஆனால்  ஜியோ  வந்ததிலிருந்து  4G க்கு  மாறிவிட்டோம்  அதன் பிறகு மற்ற நிறுவனங்களும் 4G  வழங்க ஆரம்பித்தது, அதும் மிகவும் குறைவான  விலையில் 4G கிடைப்பது இந்தியாவில் தான்  என்று  தற்பொழுது  வந்த ஆய்வின் மூலம் தெரிய வந்தது 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

டெலிகாம்  துறையில்  அதாவது  ஏர்டெல், வோடபோன், ஐடியா , BSNL மற்றும் முன்பு  ரோமிக்  கால்களுக்கு  கட்டணம்  வசூலித்து  கொண்டிருந்தது, இப்பொழுது  ஜியோ  வந்ததிலிருந்து  ரோமிங்  கால்களும் இலவசமாக  ஆகியது. ஜியோவின் திட்டத்தால் தாக்குப்பிடிக்க முடியாமல்  பலரும், போட்டியை சமாளிக்க மற்ற நெட்வொர்க் நிறுவனங்களும் டேட்டா விலையை குறைத்தன. தற்போதும், டேட்டா சந்தையில் ஜியோவின் போட்டியை மற்ற நிறுவனங்களால் சமாளிக்க முடியவில்லை.இதன் காரணமாக  தங்கள் வாடிக்கையாளர்களை  தக்கவைத்து கொள்ள  புது புது திட்டங்களை  அறிவித்து வருகிறது.

இந்நிலையில், 230 நாடுகளில் மொபைல் டேட்டா குறித்து லண்டனைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ஆய்வு நடத்தியுள்ளது. இதில், இந்தியாவில் தான் குறைந்த விலையில் டேட்டா கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சராசரியாக ரூ.18.30 ரூபாயில் இந்தியாவில் 1 ஜி.பி மொபைல் டேட்டா வழங்கப்படுகிறது.

இதுவே, பிரிட்டனில் 1 ஜி.பி மொபைல் டேட்டா ரூ.469.77 விலையாக உள்ளது. அமெரிக்காவில் இது ரூ.872.51ஆக உள்ளது.

டாப் 5 இடங்களில் இந்தியா, கிர்கிஸ்தான், கஸக்ஸ்தான், உக்ரைன் மற்றும் ரூவாண்டா நாடுகள் உள்ளன. பட்டியலின் கடைசி இடத்தில் ஜிம்பாவே உள்ளது. அங்கு 1 ஜி.பி டேட்டாவின் விலை சராசரியாக ரூ.5,305.02 என்ற விலையில் கிடைக்கிறது.

செல்போன் நெட்வொர்க் நிறுவனங்கள் வழங்கும் ஆஃபர்களின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo