இலவச WiFi பயன்படுத்தும் மக்களுக்கு Google யின் அதிரடி எச்சரிக்கை
இலவச WiFi பயன்படுத்தும் பயனர்களை Google எச்சரித்துள்ளது
பொது இடங்களில் இலவச Wifi பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்
இன்டர்நெட்டில் இடையில் பாயும் டேட்டா திருடலாம் அல்லது கண்காணிக்கலாம்
இலவச WiFi பயன்படுத்தும் பயனர்களை Google எச்சரித்துள்ளது அதாவது நீங்கள் ஏர்போர்ட், ஹோட்டல், cafe, ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் இலவச Wifi பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது அதாவது நாம் எப்பொழுதும் பொது இடங்களின் wifi பயன்படுத்தும்போது நமது மொபைல் டேட்டா குறைவாக இருப்பதி கவனித்திருப்போம் ஆனால் இதனால் நம் மெசேஜ் என்ன வீடியோ பாக்கிறோம், மற்றும் ஆன்லைன் பேமன்ட் மற்றும் எவ்வளவு டேட்டா செலவழிக்கப்படுகிறது என்பதை கண்காணிக்கப்படுகிறது என்று Google எச்சரித்துள்ளது, இருப்பினும் கூகுள் லேட்டஸ்ட் வார்னிங்கில் ஒரு வித்தியாசமான கதையை சொல்லுகிறது. கூகிள் தனது ஆண்ட்ராய்டு: திரைக்குப் பின்னால் என்ற தலைப்பில், டெக்ஸ்ட் அடிப்படையிலான மோசடிகள் குறித்த அறிக்கை, பொது வைஃபையின் பாதுகாப்பு குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது, ஸ்மார்ட்போன் பயனர்கள் அவற்றைத் தவிர்க்க அறிவுறுத்துகிறது இதன் முழு விவரம் பார்க்கலாம் வாங்க.
Surveyஏன் இலவச WIFI ஆபத்தானது ?
பொது வைஃபை மற்றும் இலவச வைஃபை ஆகியவை பாஸ்வர்ட் தேவைப்பட்டால் அல்லது கஃபே அல்லது ஹோட்டல் போன்ற நம்பகமானதாக மற்றும் பாதுகாப்பானதாகத் தோன்றலாம். ஆனால், சைபர் தாக்குபவர்களுக்கு இது எளிதான என்ட்ரியாக என்று கூகிள் கூறுகிறது. நீங்கள் WIFI உடன் இணைக்கப்பட்டவுடன், ஹேக்கர்கள் உங்கள் டிவைஸ் யில் இன்டர்நெட்டில் இடையில் பாயும் டேட்டா திருடலாம் அல்லது கண்காணிக்கலாம். இதுபோன்ற சூழ்நிலையில், பேங்க் தகவல்கள், தனிப்பட்ட மெசேஜ்கள் மற்றும் லாகின் விவரங்கள் போன்ற பயனர்களின் தனிப்பட்ட தகவல்களும் ஆபத்தில் உள்ளன. தாக்குபவர்கள் உங்கள் போனில் மேல்வேர் சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யலாம். பொது வைஃபையைப் பயன்படுத்தும் போது பயனர்கள் ஆன்லைன் ஷாப்பிங், பேங்க் அல்லது தனிப்பட்ட அக்கவுண்ட் அணுகக்கூடாது என்று கூகிள் அறிவுறுத்துகிறது. மோசடி செய்பவர்கள் மக்களைச் சென்றடைய புதிய முறைகளைப் பின்பற்றி வருகின்றனர்.
இதையும் படிங்க:இந்தியாவில் ஒவ்வொரு நம்பரும் +91 யில் வருவது ஏன் கவனித்துல்லிர்களா
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் UPI கட்டணங்கள் இன்று ஸ்மார்ட்போன் பயனர்களின் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டன. உணவு ஆர்டர் செய்வதிலிருந்து பில்களை செலுத்துவது வரை அனைத்திற்கும் மக்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களை நம்பியுள்ளனர். எனவே, விமான நிலையங்கள், கஃபேக்கள், ஹோட்டல் லாபிகள் மற்றும் ரயில் நிலையங்களில் இலவச வைஃபையை இணைப்பது பயனர்களின் தனிப்பட்ட மற்றும் நிதித் தரவை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும். இந்தியாவில் சைபர் குற்றங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன, எனவே நீங்கள் இன்டர்நெட்டில் எங்கு, எப்படி இணைகிறீர்கள் என்பதில் எச்சரிக்கையாக இருப்பது முக்கியம்.
மேலும் ஸ்மார்ட்போன் சம்மதப்பட்ட மோசடி இந்த 2024 லிருந்து $400 பில்லியன் மோசடி நடந்துள்ளது அதில் பல பேரின் நம்பர் திருடப்பட்டுள்ளது, மேலும் இதன் மூலம் மிக பெரிய பிஷ்ஷிங் உண்டு பண்ணி மிக பெரிய தீயை உண்டு பண்ணியுள்ளது அதாவது இதன் மூலம் மொத்த டேட்டாவும் பரி போகலாம்.
இது போன்ற Scam லிருந்து நம்மை பாதுகாத்து கொள்வது எப்படி?
பொது Wifi பயன்படுத்துவதை மக்கள் எந்த வித தேவையின்றி பயன்படுத்துவதை தடுப்பது நல்லது, ஒரு வேலை நீங்கள் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தால், பேங்க் அக்கவுண்ட் லாகின் அல்லது UPI பாஸ்வர்ட் போன்றவற்றை போடுவதை தவிர்க்க வேண்டும் இதை தவிர எந்த வித சோசியல் மீடியா தளங்களிலும் லாகின் மற்றும் முக்கிய தகவலை நிரப்பமல் இருப்பது நல்லது மேலும் நீங்கள் ஆட்டோ கனெக்ட் செட்டிங்க்ஸ் எப்பொழுதும் டிசெபில் செய்து கொள்வது நல்லது மேலும் எப்பொழுது நீங்கள் Wifi கனேக்ச்ட் செய்யும்போது டேட்டா பாதுகாப்பதா என்க்ரிப்ட்டட் செய்யப்படுகிறதா என்பதை கவனிக்கவும்.
இதை தவிர மற்றொரு முக்கியமாக Google அறிவுறுத்துவது என்னவென்றால் பொது Wifi பயன்படுத்தி சொப்ட்வேர் அப்டேட் செய்வதை தவிர்க்கவும் மற்றும் நீங்கள் உங்களின் சொந்த டேட்டாவை பயன்படுத்து அடிக்கடி சாப்ட்வேர் அப்டேட் செய்ய வேண்டும் இதன் மூலம் ஸ்கேம் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம் இதை தவிர தெரியாத நபரிடமிருந்து கால், மெசேஜ் போன்றவற்றில் வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile