தமிழ்நாட்டு மக்களுக்கு 4G நெட்வொர்க் பிரச்சனையே இருக்காது BSNL 7,500 4G டவர்
(BSNL) தமிழ்நாட்டு மக்களுக்கு நெட்வொர்க் பிரச்சனையை போக்க அதன் 4G சேவையை விரிவுப்படுத்தியுள்ளது
தமிழ்நாட்டில் 7,500 4G மொபைல் டவர்கள் நட்டுவைத்துள்ளது
இதற்காக யுனிவர்சல் சர்வீஸ் ஒப்ளிகேஷன் ஃபண்டின் (USOF) உதவியைப் பெற்றுள்ளது
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) தமிழ்நாட்டு மக்களுக்கு நெட்வொர்க் பிரச்சனையை போக்க அதன் 4G சேவையை விரிவுப்படுத்தியுள்ளது அதாவது 7,500 4G மொபைல் டவர்கள் நட்டுவைத்துள்ளது இதற்காக, நிறுவனம் தற்போது டிஜிட்டல் பாரத் நிதி (DBN) என்று அழைக்கப்படும், மேலும் இதற்காக யுனிவர்சல் சர்வீஸ் ஒப்ளிகேஷன் ஃபண்டின் (USOF) உதவியைப் பெற்றுள்ளது இந்திய அரசாங்கம் BSNL சந்தைப் பங்கைப் பெற விரும்புகிறது,
Surveyமொத்தம் 98,000 டவர்கள் நடப்பட்டுள்ளது
இந்த நிறுவனம், உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நாடு முழுவதும் 98,000க்கும் மேற்பட்ட டவர்களை நட்டுவைத்துள்ளது . உள்நாட்டு தொழில்நுட்பம் இந்தியா தன்னிறைவு பெற உதவும். 4G விரிவாக்கத்துடன், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் அதன் சப்ஸ்க்ரைபர் தளம் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி சமீபத்தில் செப்டம்பர் 27, 2025 அன்று டெலிகாம் நிறுவனத்தின் 4G சேவையை அறிமுகப்படுத்தினார். இது, விரைவில் 5G சேவையை அறிமுகப்படுத்துவதற்கான வேலைகளும் நடந்து வருகிறது சேர்ந்து, BSNLக்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை அளிக்கிறது . குறிப்பாக தனியார் டெலிகாம் நிறுவனங்கள் தொடர்ந்து கட்டணங்களை உயர்த்தி வரும் நிலையில், அதிவேக நெட்வொர்க்குகள் மற்றும் குறைந்த விலை கட்டணங்களுடன் BSNL, புதிய கஸ்டமர்கள் பெறலாம் . டிசம்பர் 2025க்குள் மும்பை மற்றும் டெல்லியில் BSNL 5G சேவையை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் தமிழ்நாடு மற்றும் சென்னை டெலிபோன் நிறுவனத்தின் தலைமைப் பொது மேலாளர் எஸ். பார்த்திபன், வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிஎஸ்என்எல்லின் வெள்ளி விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்டது’ திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 4ஜி டெலிகாம் தொகுப்பை அது பயன்படுத்துவதாகக் கூறினார்.
இதையும் படிங்க நம்ம BSNL மட்டும் தான் வெறும் ரூ,300க்குள் முழுசா 1 மாதம் வேலிடிட்டி தர முடியும்
தமிழ்நாட்டில் எங்கு எங்கு 4G டவர் கொண்டுவரப்பட்டுள்ளது?
மாநிலத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் 19 தளங்கள் 4G க்கு மேம்படுத்தப்பட்டுள்ளன, மேலும் சேலம், கடலூர், வேலூர், மதுரை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள கிராமங்களை உள்ளடக்க திட்டமிடப்பட்டுள்ளது.
USOF திட்டத்தின் கீழ், 289 கிராமங்கள் ஆரம்பத்தில் 4G கவரேஜ் இல்லாதவையாக அடையாளம் காணப்பட்டதாக திரு. பார்த்திபன் கூறினார். இதன் அடிப்படையில், 2G நெட்வொர்க் ஏற்கனவே உள்ள 222 இடங்களில் புதிய தவர்ககளை நடவும் , 35 இடங்களை 4G ஆக மேம்படுத்தவும் BSNL திட்டமிட்டுள்ளது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile