சியோமி நிறுவனம் தனது எம்ஐ 10டி மற்றும் எம்ஐ 10டி ப்ரோ மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படுகிறது. எம்ஐ 10டி சீரிஸ் மாடல்களுக்கு உலகில் முதல் முறையாக இந்தியாவில் தான் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் 2.8 ஜிபி அளவு கொண்டுள்ளது.
புதிய அப்டேட் டவுன்லோட் செய்ய சியோமி ஸ்மார்ட்போன்களின் செட்டிங்ஸ் மற்றும் அபவுட் போன் ஆப்ஷன்களை க்ளிக் செய்து எம்ஐயுஐ வெர்ஷனை க்ளிக் செய்து check for updates ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
ஆண்ட்ராய்டு அப்டேட் உடன் ஜனவரி மாதத்திற்கான செக்யூரிட்டி பேட்ச் வழங்கப்படுகிறது. எம்ஐ 10டி மற்றும் 10டி ப்ரோ பயனர்களுக்கு சிறப்பான மீடியா கண்ட்ரோல் டூல், ஸ்மார்ட் ஹோம் கண்ட்ரோல், டீபால்ட் ஸ்கிரீன் ரிகார்டர் போன்ற அம்சங்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Mi 10T ஒரு இரட்டை சிம் (நானோ) போன் மற்றும் Android 10 ஐ அடிப்படையாகக் கொண்ட MIUI 12 இல் வேலை செய்கிறது. போனில் 6.67 இன்ச் முழு HD + டிஸ்ப்ளே 20: 9 என்ற ரேஷியோ , அப்டேட் வீதம் 144 ஹெர்ட்ஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் உள்ளது. இந்த போன் ஒரு ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC மற்றும் 8 ஜிபி LPDDR5 5 ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
சியோமி எம்ஐ 10டி மற்றும் எம்ஐ 10டி ப்ரோ ஸ்மார்ட்போன்கள் காஸ்மிக் பிளாக் சார்ந்த செராமிக் பினிஷ், லூனார் சில்வர் சார்ந்த மேட் பிராஸ்ட் பினிஷ் செய்யப்பட்டு உள்ளது.