ஹேண்ட்செட் உற்பத்தியாளர் சியோமி தனது முதல் Foldable Smartphone மி மிக்ஸ் போல்ட் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்குகிறது, இரண்டு டிஸ்ப்ளேக்கள் மற்றும் போனில் 108 மெகாபிக்சல் பிரைமரி கேமரா உள்ளிட்ட பல நல்ல சிறப்பம்சங்கள் மி மிக்ஸ் போலடில் காணப்படுகின்றன, சக்திவாய்ந்த ப்ரோசெசர் மற்றும் லிக்யூட் லென்ஸ் ( (Liquid Lens camera) ) பயன்படுத்தப்பட்டன என்பது. இந்த சமீபத்திய Mi Mix Fold விலை மற்றும் அனைத்து சிறப்பம்சங்களையும் பற்றிய விரிவான தகவல்களை இப்போது தருகிறோம்.
விலை தகவல்.
எம்ஐ மிக்ஸ் போல்டு ஸ்மார்ட்போனின் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை 9999 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 1,11,735 என்றும் 12 ஜிபி + 512 ஜிபி மாடல் விலை 10999 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 1,22,905 என்றும் 12 ஜிபி + 512 ஜிபி கிளாஸ் பிளாக் மற்றும் 16 ஜிபி + 512 ஜிபி செராமிக் ஸ்பெஷல் எடிஷன் விலை 12,999 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 1,45,255 என நி்ர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
– 8.01 இன்ச் 2480×1860 பிக்சல் QHD+ AMOLED HDR10 + டிஸ்ப்ளே
– 6.5 இன்ச் 2520×840 பிக்சல் AMOLED வெளிப்புற டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர்
– அட்ரினோ 660 GPU
– 12 ஜிபி LPPDDR5 3200MHz ரேம், 256 ஜிபி UFS 3.1 மெமரி
– 12 ஜிபி / 16 ஜிபி LPPDDR5 3200MHz ரேம், 512 ஜிபி (Ultra) UFS 3.1 மெமரி
– டூயல் சிம்
– எம்ஐயுஐ 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
– 108 எம்பி பிரைமரி கேமரா, f/1.75, LED பிளாஷ், லிக்விட் லென்ஸ்
– 8 எம்பி கேமரா
– 13 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.4
– 20 எம்பி செல்பி கேமரா
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– யுஎஸ்பி டைப் சி ஆடியோ
– 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– யுஎஸ்பி டைப் சி
– 5,020 எம்ஏஹெச் பேட்டரி
புது ஸ்மார்ட்போனில் 8.01 இன்ச் WQHD+ மடிக்கக்கூடிய உள்புற டிஸ்ப்ளே, 6.52 இன்ச் AMOLED வெளிப்புற டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது
இத்துடன் 108 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி 123 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா மற்றும் லிக்விட் லென்ஸ் தொழில்நுட்பம் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் இது இகும்.