31 நாட்கள் வேலிடிட்டியுடன் மூன்று திட்டங்களை அறிமுகப்படுத்திய Vodafone idea நிறுவனம்.

Updated on 02-May-2022
HIGHLIGHTS

வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் மூன்று புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது

VI விலை ரூ. 98, ரூ. 195 மற்றும் ரூ. 319 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இவை தவிர வி நிறுவனம் ரூ. 29 மற்றும் ரூ. 39 விலையில் 4ஜி டேட்டா வவுச்சர்களை அறிவித்து இருக்கிறது

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) உத்தரவைத் தொடர்ந்து, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 30 நாட்கள் மற்றும் 31 நாட்களுக்கு ப்ரீ-பெய்டு திட்டங்களை அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளன. இந்த எபிசோடில், இப்போது வோடபோன் ஐடியா (Vi) மூன்று புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, இதில் 31 நாட்கள் வரை செல்லுபடியாகும். Vi ஆனது ரூ.98, ரூ.195 மற்றும் ரூ.319 ஆகிய மூன்று திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து திட்டங்களுடனும் வெவ்வேறு செல்லுபடியாகும். 

வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் மூன்று புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 98, ரூ. 195 மற்றும் ரூ. 319 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

ரூ. 98 பிரீபெயிட் சலுகையில் 200MB டேட்டா, அன்லிமிடெட்ட வாய்ஸ் கால் உள்ளிட்ட பலன்கள் 15 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. வி ரூ. 195 பிரீபெயிட் சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், 300 எஸ்.எம்.எஸ். மற்றும் 2GB டேட்டா வழங்கப்படுகிறது. ரூ. 319 பிரீபெயிட் சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் 2GB தினசரி டேட்டா வழங்குகிறது. 

வி ரூ. 195 மற்றும் ரூ. 319 சலுகைகள் 31 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கின்றன. இவற்றை தேர்வு செய்வோருக்கு வி மூவிஸ் மற்றும் டி.வி. ஆப் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. வி ரூ. 319 சலுகையில் பின்ஜ் ஆல் நைட் பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது. 

இத்துடன் இதே சலுகையில் வீக்-எண்ட் ரோல் ஓவர் பலன்களும் வழங்கப்படுகிறது. இதை கொண்டு பயனர்கள் வார நாட்களில் பயன்படுத்தாத டேட்டாவை வார இறுதி நாட்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். இத்துடன் ரூ. 319 சலுகையில் 2GB பேக்கப் டேட்டா ஒவ்வொரு மாதமும் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது.

இவை தவிர வி நிறுவனம் ரூ. 29 மற்றும் ரூ. 39 விலையில் 4ஜி டேட்டா வவுச்சர்களை அறிவித்து இருக்கிறது. இவற்றில் முறையே 2GB மற்றும் 3GB டேட்டா வழங்கப்படுகின்றன. ரூ. 29 சலுகையில் இரண்டு நாட்களும், ரூ.  39 சலுகையில் ஏழு நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகின்றன.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :