Vodafone Idea (Vi) அதன் பல அன்லிமிட்டட் ஹீரோ ப்ரீ-பெய்டு திட்டங்களுக்கு டேட்டா டிலைட் சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய சலுகையின் கீழ், வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் 2 ஜிபி வரை டேட்டாவை இலவசமாகப் பெறுகிறார்கள், இருப்பினும் இந்த சலுகை தானாக செயல்படுத்தப்படாது. அதை செயல்படுத்த, வாடிக்கையாளர்கள் தங்கள் வோடபோன் ஐடியா எண்ணிலிருந்து 121249 ஐ டயல் செய்ய வேண்டும். இந்த சலுகையை Vi மொபைல் ஆப் மூலமாகவும் செயல்படுத்தலாம்.
Vi's Unlimited Hero திட்டத்தின் ஆரம்ப விலை ரூ.299. இது தவிர, இந்த சலுகை ரூ.359, ரூ.409 மற்றும் ரூ.475 திட்டங்களிலும் கிடைக்கிறது. டேட்டா டிலைட் சலுகையின் கீழ், வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் 2 ஜிபி இலவச டேட்டாவைப் பெறுவார்கள். இது தவிர, Binge All Night கிடைக்கும், அதாவது இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை, அன்லிமிட்டட் இன்டர்நெட்டை பயன்படுத்தலாம்..
புதிய சலுகையில் வார இறுதி டேட்டா ரோல்ஓவர் உள்ளது. வாரம் முழுவதும் மீதமுள்ள தரவை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயன்படுத்தலாம். வோடபோன் ஐடியா சமீபத்தில் ரூ.82 ஆட் ஆன் பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது, இதில் வாடிக்கையாளர்கள் 28 நாட்கள் செல்லுபடியாகும் SonyLIV பிரீமியத்தின் சந்தாவைப் பெறுகிறார்கள்.
கடந்த மாதம், 31 நாட்கள் வரை செல்லுபடியாகும் ரூ.98, ரூ.195 மற்றும் ரூ.319 ஆகிய ப்ரீ-பெய்டு திட்டங்களை Vi அறிமுகப்படுத்தியது. இந்த திட்டங்களில், அனைத்து நெட்வொர்க்குகளிலும் 2 ஜிபி வரை டேட்டா மற்றும் அன்லிமிட்டட் காலிங் வசதி கிடைக்கிறது.