Vivo ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 OS அப்டேட்.

Updated on 12-Apr-2021
HIGHLIGHTS

விவோ வை19 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11 அப்டேட் வழங்கப்படுகிறது

னவரியில் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் விவோ ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் இந்த மாடல் இடம்பெறாமல் இருந்தது.

செல்ஃபி எடுக்க 16 எம்பி ஏஐ கேமரா வழங்கப்பட்டுள்ளது.

விவோ வை19 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11 அப்டேட் வழங்கப்படுகிறது. இதுபற்றிய தகவல்களை விவோ வை19 பயனர்கள் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். ஜனவரியில் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் விவோ ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் இந்த மாடல் இடம்பெறாமல் இருந்தது. புது அப்டேட் பற்றி வேறு எந்த தகவலும் இல்லை.

அம்சங்களை பொருத்தவரை விவோ வை19 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் FHD+ 2340×1080 பிக்சல் 19.5:9 டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி65 ஆக்டா-கோர் பிராசஸர், 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. 
 
விவோ நிறுவனம் தனது வை19 ஸ்மார்ட்போனினை 2019 வாக்கில் ஆண்ட்ராய்டு 9 ஒஎஸ் உடன் அறிமுகம் செய்யப்பட்டது. பின் ஆண்ட்ராய்டு 10, தற்போது ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறுகிறது. புதிய ஆண்ட்ராய்டு 11 அப்டேட் 3.2 ஜிபி அளவு கொண்டுள்ளது.  

புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி எடுக்க 16 எம்பி ஏஐ கேமரா வழங்கப்பட்டுள்ளது.

விவோ வை19 ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை மைக்ரோ யுஎஸ்பி போர்ட், டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5.0, எப்எம் ரேடியோ போன்றவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டிருக்கிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :