Vivo S9 44MP செலஃபீ கேமராவுடன் விரைவில் அறிமுகமாகும்.

Updated on 01-Mar-2021
HIGHLIGHTS

விவோ நிறுவனம் தனது எஸ்9 ஸ்மார்ட்போனினை இன்னும் சில தினங்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது

சிறப்பம்சங்களை பொருத்தவரை இது மீடியாடெக் டிமென்சிட்டி 1100 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக விவோ எஸ்9 இருக்கும் என கூறப்படுகிறது.

விவோ நிறுவனம் தனது எஸ்9 ஸ்மார்ட்போனினை இன்னும் சில தினங்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் வெளியீட்டை தெரிவிக்கும் டீசர்களை விவோ வெளியிட்டது. அந்த வரிசையில் புதிய ஸ்மார்ட்போனிற்கான மற்றொரு டீசரை விவோ வெளியிட்டு இருக்கிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை இது மீடியாடெக் டிமென்சிட்டி 1100 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக விவோ எஸ்9 இருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் டூயல் செல்பி கேமரா வழங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி புதிய விவோ எஸ்9 ஸ்மார்ட்போன் 44 எம்பி செல்பி கேமரா, சாப்ட் பிளாஷ் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர புதிய எஸ்9 மாடல் மூன்று பிரைமரி கேமரா, OIS வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் மெல்லிய மெட்டல் பிரேம், கிரேடியன்ட் பினிஷ், புளூ பினிஷ் என இரு நிறங்களில் உருவாகி இருக்கிறது.

முந்தைய தகவல்களின் படி புதிய விவோ எஸ்9 மாடலில் 6.44 இன்ச் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், 4000 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்பட்டது. பின்புறம் 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மோனோ கேமரா வழழங்கப்படலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :