Vivo ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு OS அப்டேட்

Updated on 26-Apr-2021
HIGHLIGHTS

Vivo ஸ்மார்ட்போன் ஒஎஸ் 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது

விவோ இசட்1 ப்ரோ மற்றும் விவோ இசட்1எக்ஸ் மாடல்களை பயன்படுத்துவோர் ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளன

கிரேஸ்கேல் டெஸ்டிங்கின் போது தேர்வு செய்யப்பட்ட சிலருக்கு மட்டும் அப்டேட் வழங்கப்படும்

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட விவோ எஸ்1 ப்ரோ, விவோ இசட்1 ப்ரோ மற்றும் விவோ இசட்1எக்ஸ் ஸ்மார்ட்போன் யூனிட்களுக்கு பன்டச் ஒஎஸ் 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்த அப்டேட் கிரேஸ்கேல் டெஸ்ட் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

புது அப்டேட் கிடைத்து இருப்பதாக விவோ எஸ்1 ப்ரோ, விவோ இசட்1 ப்ரோ மற்றும் விவோ இசட்1எக்ஸ் மாடல்களை பயன்படுத்துவோர் ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளனர். தற்போது கிரேஸ்கேல் டெஸ்ட் துவங்கி இருக்கும் நிலையில், அனைவருக்குமான அப்டேட் விரைவில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

கிரேஸ்கேல் டெஸ்டிங்கின் போது தேர்வு செய்யப்பட்ட சிலருக்கு மட்டும் அப்டேட் வழங்கப்படும். விவோ எஸ்1 ப்ரோ, விவோ இசட்1 ப்ரோ மற்றும் விவோ இசட்1எக்ஸ் மாடல்கள் ஆண்ட்ராய்டு 9 பை சார்ந்த பன்டச் ஒஸ்9 உடன் அறிமுகம் செய்யப்பட்டது. பின் பன்டச் ஒஎஸ் 10 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வெளியிடப்பட்டது.

விவோ எஸ்1 ப்ரோ மாடலுக்கான அப்டேட் 3.79 ஜிபியாகவும், விவோ இசட்1எக்ஸ் மாடலுக்கான அப்டேட் 3.29 ஜிபியாகவும், விவோ இசட்1 ப்ரோ மாடலுக்கான அப்டேட் பற்றி எந்த தகவலும் இல்லை. இந்த ஸ்மார்ட்போன்களை அப்டேட் செய்யப்படும் போது யூனிட்களை சார்ஜ் செய்திருப்பதையும், சீரான வைபை நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :