ரீசாஜ் திட்டங்களின் விலையை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உயர்த்தியது. எனினும், வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள நிறுவனங்கள் புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. ஒரு மொபைல் பயனரின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் டெலிகாம் நிறுவனங்கள் திட்டங்களை வகுத்து வருகிறது.
அந்த வகையில், 3ஜிபி டேட்டா பலன்களுடன் வோடபோன் ஐடியா நிறுவனம் 4 ரீசார்ஜ் திட்டங்களை தங்கள் வசம் கொண்டுள்ளது. இந்த திட்டங்களில் அன்லிமிட்டட் கால்கள , வரம்பற்ற இன்டர்நெட் சேவை, விஐ சேவைகளின் இலவச அணுகல்கள் ஆகியன பயனர்களுக்கு கிடைக்கிறது. ஒவ்வொரு திட்டமும் ஒவ்வொரு கால அளவைக் கொண்டுள்ளது. இதில் உங்களுக்கான திட்டம் எது என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
மேலும் VI-இன் புதிய ஹீரோ அன்லிமிடெட் (Hero Unlimited) டேட்டா வசதியுடன் இரவு 12 மணி முதல் காலை 6 மணிவரை இலவச அன்லிமிடெட் டேட்டாவை பயனர்கள் அனுபவிக்க முடியும். மேலும், வார இறுதியில் மீதமிருக்கும் டேட்டா பேலன்ஸ், அடுத்த வார 4G டேட்டா வரம்புடன் சேர்க்கப்படும். இதனால், எதுவும் வீணாக்காமல், பயனர்கள் தங்களின் சேவையை அனுபவிக்க வோடபோன் ஐடியா நிறுவனம் துணை நிற்கிறது.
இந்த திட்டம் 28 நாள்களுக்கு செல்லுபடியாகும். தினசரி 3ஜிபி வரம்பற்ற டேட்டாவை இத்திட்டம் வழங்குகிறது. 3ஜிபி என்ற வரம்பை தாண்டி பயன்படுத்தும்போது, இணையத்தின் வேகம் 64kpbs ஆக குறையும். இது தவிர அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிட்டட் காலிங் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவற்றை பயனர்கள் பெறுவர். மேலும், Vi movies and TV, டேட்டா டிலைட்ஸ், வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர், பிங்கே ஆல் நைட் போன்ற ஹீரோ பிரீமியம் சேவைகள் பயனர்களுக்குக் கிடைக்கும்.
வோடபோன் ஐடியாவின் 28 நாள்களுக்கு செல்லுபடியாகும் ரூ.601 ரீசார்ஜ் திட்டத்தில், கூடுதலாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் எடிஷனின் (Disney+ Hotstar Mobile Subscription) ஒரு வருட சந்தா கிடைக்கிறது. வேறு நன்மைகளாக தினசரி 3 ஜிபி டேட்டா உடன் 16ஜிபி டேட்டா இலவசமாக இத்திட்டத்தில் கிடைக்கிறது. மேலும், தினசரி 100 எஸ்எம்எஸ், அன்லிமிட்டட் இலவச அழைப்புகள் வழங்கப்படுகிறது. மேலும் விஐ மூவீஸ் அண்ட் டிவி, Data Delights, வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர், பிங்கே ஆல் நைட் போன்ற Hero Unlimited சேவைகள் பயனர்களுக்குக் கிடைக்கும்.
வோடபோன் ஐடியாவின் 58 நாள்களுக்கு செல்லுபடியாகும் ரூ.699 ரீசார்ஜ் திட்டத்தில், தினசரி 3 ஜிபி டேட்டா உடன், தினசரி 100 எஸ்எம்எஸ், அன்லிமிட்டட் இலவச காலிங் வழங்கப்படுகிறது. மேலும் விஐ மூவீஸ் அண்ட் டிவி, டேட்டா டிலைட்ஸ், வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர், Binge All Night போன்ற ஹீரோ அன்லிமிடெட் சேவைகள் கிடைக்கும்.
Vodafone Idea 70 நாள்களுக்கு செல்லுபடியாகும் ரூ.901 ரீசார்ஜ் திட்டத்தில், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் எடிஷனின் ஒரு வருட சந்தா கிடைக்கிறது. வேறு நன்மைகளாக தினசரி 3 ஜிபி டேட்டா உடன் 48ஜிபி டேட்டா இலவசமாக இத்திட்டத்தில் கிடைக்கிறது.இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ், அன்லிமிட்டட் இலவச அழைப்புகள் வழங்கப்படுகிறது. மேலும், விஐ மூவீஸ் அண்ட் டிவி, டேட்டா டிலைட்ஸ், Weekend Data Rollover, பிங்கே ஆல் நைட் போன்ற Hero Unlimited சேவைகள் கூடுதல் நன்மைகளாக பயனர்களுக்கு கிடைக்கிறது.