Whatsapp யில் இருக்கும் புதிய டாப் 5 பிரைவசி அம்சம்.
Whatsapp தன்னுடைய பாதுகாப்பு அம்சங்களில் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ள
வாட்ஸ் அப் செயலியானது, உலகளவில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளது
வாட்ஸ் அப் யூசர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு எங்களுக்கு எப்போதுமே முக்கியமான ஒன்று” என தெரிவித்துள்ளார்.
தன்னுடைய பாதுகாப்பு அம்சங்களில் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ள வாட்ஸ் அப் செயலியானது, உலகளவில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய மெட்டா இந்தியாவின் மார்க்கெட்டிங் துறையின் இயக்குனர், திரு.அவினாஷ் பண்ட், “வாட்ஸ்அப் ஆனது அதன் பாதுகாப்பு மற்றும் இதர வசதிகளை மேம்படுத்துவதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்த பிரச்சாரத்தின் மூலம் வாட்ஸ் அப்பின் புதிய பாதுகாப்பு அம்சங்களை பற்றிய விழிப்புணர்வை உலக அளவில் எடுத்து செல்ல இருக்கிறோம். வாட்ஸ் அப் யூசர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு எங்களுக்கு எப்போதுமே முக்கியமான ஒன்று” என தெரிவித்துள்ளார்.. இது குறித்து மேலும் பேசிய அவர் “இரண்டு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் செய்திகளை பரிமாறிக் கொள்ள வாட்ஸ்அப்பை பயன்படுத்துவது மிகவும் பெருமைக்குரிய விஷயமாக உள்ளது” என்று கூறியுள்ளார்.
Surveyவாட்ஸ் அப்பின் புதிய ப்ரைவசி அம்சங்கள்:
ஆன்லைன் ஸ்டேட்டஸ் (Online status) ஐ மறைத்து வைக்கலாம்:
இதன் மூலம் யூசர் தன்னுடைய ஆன்லைன் ஸ்டேட்டஸை குறிப்பிட்ட ஒருவருக்கு மட்டுமோ அல்லது பலரிடமிருந்து மறைத்து வைப்பதோ அல்லது குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் தெரியும்படியோ வைத்துக் கொள்ள முடியும்.
ஒருமுறை பார்க்கும் வகையில் அனுப்பப்படும் செய்திகளை இனிமேல் ஸ்கிரீன்ஷாட் (Screen-shot) செய்ய முடியாது:
வாட்ஸ் அப்பில் ஒருமுறை மட்டும் பார்க்கும் வகையில் அனுப்பப்படும் செய்தியானது பலருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. எனினும் அவ்வாறு அனுப்பப்படும் செய்திகளை ஸ்கிரீன் ஷாட் செய்து சேமித்து வைத்துக் கொள்ள முடியும். இதில் திருத்தத்தை மேற்கொள்ள முடிவு செய்த வாட்ஸ் அப் – ஆனது ஒரு முறை பார்க்கும் செய்திகளுக்கு மட்டும் ஸ்க்ரீன் ஷாட்(screen-shot) செய்யும் வசதியை நீக்கபோவதாக அறிவித்துள்ளது, எனினும் இந்த வசதி இன்னும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை இப்போது இதற்கான சோதனையில் உள்ள வாட்ஸ் அப் விரைவில் இதை அமல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்கிரிப் செய்யப்பட்ட செய்திகள்:
பயனர்கள் தங்கள் Chat history- யை backup செய்யும்பொழுது “என்க்ரிப்ட்(Encrypt)” எனப்படும் மறைகுறியாக்குதல் என்ற முறையில் தங்கள் தகவலை பாதுகாக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது இதன் மூலம் குறிப்பிட்ட ஒரு கடவுச்சொல் அல்லது Encryption Key கொண்டு, அந்தப் பயனர் மட்டுமே அந்த செய்தியை திறக்க செய்ய இயலும்.
தானாக அழிந்து விடும் செய்திகள்:
இந்த வசதி மூலம் நாம் அனுப்பும் Text வடிவிலான செய்திகள் அல்லது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆகியவற்றை ஒரு முறை ஓபன் செய்த பிறகு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் அவை தானாகவே மறைந்து போகும் வகையில் செய்து கொள்ள முடியும். அதற்கான கால அளவை செய்தியை அனுப்புபவரே செட் செய்து வைத்துக் கொள்ள முடியும்.
டூ ஸ்டெப் வெரிஃபிகேஷன்:
பயனர்களின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க டூஸ்டப் வெரிஃபிகேஷன் எனும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு ஆறு இலக்க கடவுச்சொல்லை பயன்படுத்தியே நம்முடைய மொபைல் எண்ணை வாட்ஸ் அப் உடன் பதிவு செய்ய முடியும்.
பிளாக் மற்றும் ரிப்போர்ட்:
தங்களுக்குப் பிடிக்காத ஒருவரையோ அல்லது நாம் விரும்பாத செய்திகளை அனுப்பும் ஒருவரையோ பிளாக் செய்யவும் ரிப்போர்ட் செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இது நீண்டகாலமாகவே இருந்து வரும் ஒரு வசதி ஆகும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
