இப்பொழுது Twitterயில் எடிட் அம்சம் ட்விட்டை எடிட் செய்யலாம் ஆனா ஒரு கண்டிஷன்.
மைக்ரோ-பிளாக்கிங் மற்றும் சமூக வலைதளமான ட்விட்டர் சமீபத்தில் தனது புதிய அம்சமான எடிட் ட்வீட்டை அறிவித்தது.
ட்விட்டரின் இந்த அம்சம் குறித்து இப்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது
இந்த அம்சங்களை எவ்வாறு தவறாகப் பயன்படுத்தலாம் என்பதையும் நாங்கள் சோதித்து வருகிறோம்.
மைக்ரோ-பிளாக்கிங் மற்றும் சமூக வலைதளமான ட்விட்டர் சமீபத்தில் தனது புதிய அம்சமான எடிட் ட்வீட்டை அறிவித்தது. உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் இந்த அம்சத்திற்காக ஆவலுடன் காத்திருந்தனர். ட்விட்டரின் இந்த அம்சம் குறித்து இப்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது, இதில் பயனர்கள் ட்விட்டர் எடிட் பொத்தானை 5 முறை மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த அம்சங்களைப் பற்றிய தகவல்களை வழங்கும்போது, ட்விட்டர் இந்தியாவே எங்கள் புதிய அம்சங்களை நாங்கள் சோதித்து வருகிறோம் என்று கூறியது, அதே போல் பயனர்கள் இந்த அம்சங்களை எவ்வாறு தவறாகப் பயன்படுத்தலாம் என்பதையும் நாங்கள் சோதித்து வருகிறோம்.
Surveyஎடிட் செய்யப்பட்ட ட்விட்களை தெரியப்படுத்தும் வகையில் டைம்ஸ்டாம்ப், ஐகான் மற்றும் லேபல் இடம்பெறும். உண்மையான ட்விட்டர் பதிவு எடிட் செய்யப்பட்டு இருக்கிறது என்பதை வாசகரக்கள் எளிதில் அறிந்து கொள்ள முடியும். அந்த லேபிலை க்ளிக் செய்ததும், ட்விட்களின் எடிட் வரலாற்றை பார்க்க முடியும். அதில் ட்விட் எத்தனை முறை எடிட் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். தற்போதைக்கு இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ட்விட்களை எடிட் செய்ய முடியும், ஆனாலும் அவற்றை எத்தனை முறை எடிட் செய்ய முடியும் என்பதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக ட்விட் செய்த முப்பது நிமிடங்கள் கழித்தே அவற்றை எடிட் செய்ய முடியும். கூடுதலாக அடுத்த முப்பது நிமிடங்களில் ட்விட்களை ஐந்து முறை மட்டுமே எடிட் செய்ய முடியும். இத்துடன் ட்விட் எடிட் செய்யப்பட்டு இருப்பதை அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.
முதற்கட்டமாக எடிட் செய்யும் வசதி ட்விட்டர் புளூ சந்தாதாரர்களுக்கு மட்டும் வழங்கப்படும். அதன் பின் தளத்தில் அனைவருக்கும் இந்த வசதியை வழங்குவது பற்றி ட்விட்டர் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. பயனர்கள் இந்த அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதை பொருத்து, மேலும் அதிக பகுதிகளில் இந்த அம்சத்தை வழங்குவது பற்றி ட்விட்டர் முடிவு செய்ய இருக்கிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கலாம்.
இந்தியாவில் ட்விட்டர் புளூ சந்தா வசதி இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை என்பதால், ட்விட்களை எடிட் செய்யும் வசதி தற்போதைக்கு கிடைக்கவில்லை. அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா என தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் மட்டுமே ட்விட்டர் புளூ சந்தா வழங்கப்பட்டு இருக்கிறது. மற்ற நாடுகளிலும் இந்த சேவை வழங்கப்படுமா என்பது தெளிவற்ற நிலையிலேயே உள்ளது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
