மூன்று நாட்களில் அசுரர் விற்பனை செய்த Xiaomi

HIGHLIGHTS

சியோமி நிறுவனம் மூன்றே நாட்களில் ஒரு லட்சம் ஸ்மார்ட் டிவிக்களை விற்று இருக்கிறது

ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் சீரிஸ் மாடல்களுக்கு ரூ. 7 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது

ரெட்மி ஸ்மார்ட் டிவி 32 இன்ச் மற்றும் 43 இன்ச் மாடல்களுக்கு ரூ. 3500 தள்ளுபடி வழங்கப்படுகிறது

மூன்று நாட்களில் அசுரர் விற்பனை செய்த Xiaomi

இந்தியாவில் முன்னணி ஆன்லைன் நிறுவனங்களின் சிறப்பு விற்பனையில் சியோமி நிறுவனம் மூன்றே நாட்களில் ஒரு லட்சம் ஸ்மார்ட் டிவிக்களை விற்று இருக்கிறது. சியோமியின் எம்.ஐ. வலைதளம், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் அறிவிக்கப்பட்டு இருக்கும் சிறப்பு சலுகை விற்பனையால் இது சாத்தியமானது என சியோமி தெரிவித்து இருக்கிறது.
 
தற்போது ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் சீரிஸ் மாடல்களுக்கு ரூ. 7 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரெட்மி ஸ்மார்ட் டிவி 32 இன்ச் மற்றும் 43 இன்ச் மாடல்களுக்கு ரூ. 3500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. எம்ஐ டிவி 5எக்ஸ் சீரிஸ் மாடலுக்கு ரூ. 3 ஆயரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

அமேசான் தளத்தில் விற்பனையான பத்து டிவிக்களில் எட்டு மாடல்கள் எம்.ஐ. மற்றும் ரெட்மி பிராண்டை சேர்ந்தவை ஆகும். ரெட்மி டிவி எக்ஸ் 50 இன்ச், எம்ஐ டிவி 4ஏ 32 இன்ச் மற்றும் எம்ஐ டிவி 5எக்ஸ் 43 இன்ச் மாடல்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile