வெறும் ரூ,10,000 ஆரம்ப விலையில் Google 5.0 QLED TV அறிமுகம் செய்த Thomson அம்சம் என்ன பாருங்க

HIGHLIGHTS

Thomson இந்தியாவில் அதன் புதிய Google 5.0 QLED TV சீரிஸ் அறிமுகம் செய்தது

ந்த புதிய டிவி Google TV 5.0 அடிபடையின் கீழ் இயங்குகிறது

ந்த டிவியின் ஆரம்பவிலை வெறும் ரூ,10,999 ஆகும்

Thomson இந்தியாவில் அதன் புதிய Google 5.0 QLED TV சீரிஸ் அறிமுகம் செய்தது, இந்த புதிய டிவி Google TV 5.0 அடிபடையின் கீழ் இயங்குகிறது, மேலும் இந்த டிவி 32 இன்ச்,40 இன்ச் மற்றும் 43 இன்ச் சைஸில் வருகிறது மேலும் இந்த டிவியில் ARM Cortex A55 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலும் இந்த டிவியின் ஆரம்பவிலை வெறும் ரூ,10,999 ஆகும் மேலும் இந்த டிவியின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Thomson Google 5.0 QLED TV விலை தகவல்.

Thomson Google 5.0 QLED TV விலை பற்றி பேசினால் இந்த டிவி மூன்று சைஸில் வருகிறது அவை

32 இன்ச் ரூ,10,999
40 இன்ச் ரூ,15,999
43 இன்ச் ரூ,16,999

மேலும் இந்த டிவி தற்பொழுது விற்பனையின் மூலம் ப்ளிப்கார்டில் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் பேங்க் ஆபரின் கீழ் 10% கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம்

Thomson Google TV 5.0 QLED சிறப்பம்சம்.

Thomson Google TV 5.0 QLED பெஸல் லெஸ் டிசைன் உடன் வருகிறது, இது 32-inch, 40-inch, மற்றும் 43 இன்ச் ஸ்க்ரீன் சைஸில் வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவியில் முழு HD-ready QLED பேணல் உடன் வழங்குகிறது மேலும் இந்த போனில் 40W டுயல் ஸ்பீக்கர் ஆடியோ அவுட்புட்டுடன் வருகிறது, மேலும் இந்த டிவியில் 350 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் மல்ட்டிபல் பிக்ஜர் மோட் ஆகியவை வழங்குகிறது

இதையும் படிங்க 1030W பவர் கொண்ட பவர்புல் Dolby Atmos சப்போர்டுடன் Zebronics புதிய soundbar அறிமுகம் பக்கவான வைப் தான் இனி

இந்த வரிசையானது கூகுள் டிவி 5.0 தளத்தில் இயங்குகிறது, இது கஷ்டமைஸ் கன்டென்ட் பரிந்துரைகளையும், கூகுள் ப்ளே ஸ்டோர் வழியாக ஆப் மற்றும் கேம்களுக்கான அக்சஸ் வழங்குகிறது. நெட்ஃபிளிக்ஸ், பிரைம் வீடியோ மற்றும் யூடியூப் போன்ற பிரபலமான ஸ்ட்ரீமிங் செயலிகள் முன்பே நிறுவப்பட்டிருக்கும் நிலையில், கூகுள் அசிஸ்டன்ட் ஆதரவானது குரல் கட்டளைகள் மற்றும் கைகள் பயன்படுத்தத் தேவையில்லாத தேடலையும் மேலும் செயல்படுத்துகிறது.

உள்ளே, இந்த டிவிகள் 1GB ரேம் மற்றும் 8GB உள்ளக சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்ட ARM Cortex-A55 குவாட்-கோர் செயலியால் இயக்கப்படுகின்றன . இந்த அமைப்பு, சீரான அன்றாடச் செயல்பாட்டையும் வேகமான வழிசெலுத்தலையும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தாம்சன் நிறுவனம் கூறுகிறது.

ஆடியோவைப் பொறுத்தவரை, இந்த டிவிகள் டால்பி-ரெடி சவுண்டுடன், AAC, AC3 மற்றும் EAC3 ஆடியோ ஃபார்மேட்களையும் ஆதரிக்கின்றன. இணைப்பு அம்சங்களில் புளூடூத் 5.0, உள்ளமைக்கப்பட்ட குரோம்காஸ்ட், டூயல்-பேண்ட் வைஃபை, மூன்று HDMI போர்ட்கள் மற்றும் இரண்டு USB போர்ட்கள் ஆகியவை அடங்கும். கூடுதல் அம்சங்களாக மிராகாஸ்ட் ஆதரவு, லைவ் சேனல், ஃபாஸ்ட் பூட் மோடு, ஹோட்டல் மோடு, ஒரு ஆப்டிகல் ஆடியோ போர்ட் மற்றும் ஒரு ஹெட்போன் ஜாக் ஆகியவை உள்ளன.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :