Thomson அறிமுகம் செய்தது 43-இன்ச் கொண்ட QLED ஸ்மார்ட் டிவி, JioTele OS அம்சம் இருக்கும்

Updated on 21-Feb-2025

Thomson இந்தியாவில் ஒரு புதிய ஸ்மார்ட்டிவி அறிமுகம் செய்தது, இது 43 இன்ச் சைஸில் வருகிறது மற்றும் QLED பேணல் கொண்டுள்ளது, இதில் முற்றிலும் புதிய JioTele OS வழங்குகிறது, இது புத்தம் புதிய JioTele OS ஐக் கொண்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் டிவி இயக்க முறைமையுடன் உள்ளூர்மயமாக்கப்பட்ட அனுபவத்தை வழங்க புதிய டிவி செயல்படும் என்று நிறுவனம் கூறுகிறது. இதை தவிர இந்த Thomson டிவி 4K ரேசளுசனுடன் வருகிறது மேலும் இந்த டிவியின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Thomson Tv விலை தகவல்

புதிய தாம்சன் 43-இன்ச் 4K QLED டிவியின் விலை இந்தியாவில் ரூ. 18,999 ஆகும். இது பிப்ரவரி 21 முதல் பிளிப்கார்ட் மூலம் விற்பனை செய்யப்படும். இந்த டிவியை வாங்கினால், ஜியோஹாட்ஸ்டார் மற்றும் ஜியோசாவ்ன் சந்தாக்கள் 3 மாதங்களுக்கு இலவசமாகக் கிடைக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. இது தவிர, ஒரு மாதத்திற்கு இலவச ஜியோ கேம்ஸ் மெம்பர் சேர்க்கை வழங்கப்படும்.

Thomson Jio TV 108 cm (43 inch) QLED

Thomson 43-இன்ச் டிவி சிறப்பம்சம்.

புதிய QLED டிவி, டெப்த் வேரியன்ட் , வைப்ரேட் கலர் மற்றும் ஷார்ப்பான டிஸ்ப்ளேக்களுடன் சிறந்த படத் தரத்தை வழங்குகிறது, மேலும் இந்த டிவி 43-இன்ச் சைஸ்ல் வருகிறது என்று தாம்சன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. 4K ரேசளுசன் கொண்ட பேனலாக இருப்பதால், டிஸ்ப்ளே 1.1 பில்லியனுக்கும் அதிகமான கலர்களை உருவாக்குகிறது. புதிய JioTele OS யில் இயங்கும் இந்த டிவி, இன் பில்ட் கன்டென்ட் வொயிஸ் அசிஸ்டன்ட் மற்றும் AI-பவர்ட் கன்டென்ட் பரிந்துரைகளுடன் வருகிறது.

பிரபலமான ஆப்கள் மற்றும் டிவி சேனல்களுக்கான அக்சஸ் தவிர, பல மொழிகளில் கன்டென்ட் வழங்க ரீஜனல் ஆப்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் சேவைகளுடன் இந்த OS முன்பே ஏற்றப்பட்டுள்ளது. இதில், ஸ்க்ரீன் பிரதிபலிக்கும் ஒரு விருப்பம் உள்ளது. கனேக்சனுக்கு பல HDMI மற்றும் USB போர்ட்களும் உள்ளன. இதில் ARC மற்றும் CEC போர்ட்களும் கிடைக்கின்றன.

தாம்சன் 43-இன்ச் 4K QLED JioTele OS டிவியில் 40W டால்பி ஆடியோ ஸ்டீரியோ பாக்ஸ் ஸ்பீடர்கள் உள்ளன. இந்த டிவியில் புளூடூத் 5.0 மற்றும் டூயல்-பேண்ட் வைஃபை (2.4 + 5 GHz) வசதிகள் உள்ளன. இது 2 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட அம்லாஜிக் ஆப் மூலம் இயக்கப்படுகிறது.

இதையும் படிங்க:Jio இந்தியாவில் அறிமுகம் செய்தது AI-Powered ஸ்மார்ட் டிவிக்காக JioTele OS

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :