TCL 115-inch QD Mini LED TV (2)
TCL அதன் அறிமுகம் செய்தது உலகின் மிக பெரிய QD Mini LED TV இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, இதனுடன் இந்த டிவியின் சைஸ் 115 இன்ச் ஆகும், மேலும் இந்த டிவியில் 20,000+ டிம்மிங் ஜோன் கச்சிதமான கலர் ரிப்ரோடக்சன் வழங்குகிறது, இதன் பிக்ஜர் குவாலிட்டி மற்றும் ஆடியோ தரத்தை மேம்படுத்த இதில் AI ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலும் இதன் அம்சங்கள் மற்றும் விலை தகவலை பற்றி பார்க்கலாம் வாங்க.
TCL 115-inch QD Mini LED TV யின் விலை பற்றி பேசினால் இது இந்தியாவில் ரூ,29,99,990க்கு வைக்கப்பட்டுள்ளது இந்த டிவியை ரிலையன்ஸ் டிஜிட்டல்,Croma, Amazon, Flipkart, மற்றும் ரீடைளர் கடைகளை இருந்து வாங்கலாம்
TCL யின் இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால் இந்த டிவி TCL QD Mini LED TV ஆகும் இது 115 இன்ச் ஸ்க்ரீன் உடன் முழு 4K ரெசளுசன் மற்றும் 144Hz ரெப்ராஸ் ரேட் 20,000+டிம்மிங் கலர் ஜோன் வழங்குகிறது, இதில் ரியலிஸ்டிக் கலர் மிக சிறந்த வியுவ் அம்சங்கள் வழங்குகிறது,இதை தவிர இதில் 98% DCI-P3 அல்ட்ரா ஹை கலர் சப்போர்ட் உடன் இந்த tv HDR5000 nits, HDR10+, TUV Blue light, மற்றும் TUV பிலிக்கர் ப்ரீ சப்போர்டுடன் வருகிறது
இந்த டிவியில் AiPQ Pro ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது, இது படம், வீடியோ மற்றும் ஆடியோ குவலிட்டியை மேம்படுத்த TCL யின் AI-இயங்கும் ப்ரோசெசர் பயன்படுத்துகிறது. இது சினிமா ஆடியோ குவாலிட்டி ONKYO 6.2.2 Hi-Fi ஆடியோ சிஸ்டம் கொண்டுள்ளது.
மேலும் இந்த டிவியில் சரியான கேமிங் அனுபத்தை வழங்க இதில் கேம் மாஸ்டர் டேக்னோலாஜி வழங்கப்படுகிறது, இது ALLM (ஆட்டோ லோ லேட்டன்சி மோட்) உள்ளது, இது 10எம்எஸ் வரை தாமதத்தை வழங்குகிறது. கேமிங்கில் கண்ணீரில்லா காட்சிகளுக்காக இந்த டிவி FreeSync Premium Pro உடன் வருகிறது.
இந்த டிவியில் Multi-View 2.0 அம்சம் பயனர்கள் இரண்டு வெவ்வேறு கட்டேன்ட்களை ஒரே நேரத்தில் ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கிறது. டிவி ஹோம்கிட் மற்றும் ஏர்ப்ளே 2 ஐ சப்போர்ட் செய்கிறது , மற்ற டிவைஸ் தடையற்ற கனெக்சன் வழங்குகிறது. இது 1 வருட ஸ்டேண்டர்ட் வாரண்டி உடன் வருகிறது.
இதையும் படிங்க: TCL Thunderbird Crane 6 Mini LED TV அறிமுகம் மற்றும் 4 சைஸ்களில் வரும்