Sony-and-TCL-1
Sony குருப் தனது தொலைக்காட்சி பிஸ்னசில் குறிப்பிடத்தக்க பகுதியை TCL குருப்புடன் கூட்டு முயற்சி மூலம் விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது. TCL ஒரு முன்னணி சீன TV தயாரிப்பு நிறுவனமாகும் மற்றும் சோனிக்கு வலுவான போட்டியாளராக உள்ளது. இந்த கூட்டை தொடர்ந்து, TCL 51% பங்குகளை வைத்திருக்கும், அதே நேரத்தில் Sony கார்ப்பரேஷன் 49% பங்குகளை வைத்திருக்கும். சோனி க்ரூப்யின் முடிவின் பின்னணியில் உள்ள முக்கிய காரணம், புதிய சகாப்தத்தில், சோனி க்ரூப் மிக சிறந்த ம்யூசிக், திரைப்படங்கள் மற்றும் கேமிங் உள்ளிட்ட அதன் என்டர்டைமேண்டில் பிஸ்னசில் கவனம் செலுத்த விரும்புகிறது.
TCL உலகின் மிக பெரிய டெலிவிஷன் ப்ரென்டிங் ஆகும் ஆனால் இந்தியாவை பொறுத்தவரை Sony மிக பெரிய நிறுவனம் என்பதால் அதை தெரியாத ஆட்களே இருக்க மாட்டார்கள் மேலும் அதேபோல TCL அதன் மிக சிறந்த டெவலப்மென்ட் உருவாக்க மிக சிறந்த டிசைன் உடன் டெலிவிஷன் மற்றும் ஹோம் ஆடியோ அப்ளயன்ஸ் மேனுபெக்ஜரிலிருந்து விற்பனை வரை அனைத்தையும் பார்த்து கொள்ளும், அதாவது TCL 51 சதவிகிதம் பங்கு இருக்கும் ஆனால் டிவியை TCL தயாரித்தலும் sony Bravia ப்ரேண்டிங் கொண்டிருக்கும், ஜப்பானிய தொழில்நுட்ப நிறுவனமான சோனி குழுமம் இன்று தனது வீட்டு பொழுதுபோக்கு பிரிவில் 51% பங்குகளை விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது. TCL உடனான கூட்டு முயற்சியானது சோனி மற்றும் பிராவியா பிராண்டுகளின் கீழ் தொலைக்காட்சிகளை தயாரிக்கும். இந்த கூட்டாண்மை TCL யின் காட்சி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்.
இந்த டீல் யின் சோனி பிரவியா டெலிவிஷன் பிஸ்னஸ் 51 சதவிகிதம் பங்கை விற்ற பிறகு ஏப்ரல் 2027 முதல் புது கலவையை எதிர்ப்பார்க்கலாம் அதாவது இந்த மாற்றமானது அடுத்த ஆண்டு வரும் புதிய டிவியில் எதிர்ப்பார்க்கலாம், அதாவது இந்த புதிய மாற்றத்திற்க்கு முக்கிய காரணம் குறைந்த மார்ஜின் டிவியை வெளியே எடுத்து மற்றும் அதிக மார்ஜின் கொண்ட பிஸ்னசில் கவனம் செலுத்த உதவியாக இருக்கும், மேலும் சீனா ப்ரென்ட் ஆன TCL தனது டெலிவிஷனில் Sony பிரெண்டை பயன்படுத்தி உலகவில் தங்களின் மிக அனுபவத்தை உயர்த்த விரும்புகிறது. மேலும் சீனாவின் மிக பழமையான மிக பெரிய எலெக்ட்ரோனிக் நிறுவனத்தில் ஒன்று TCL ஆகும், இதன் மூலம் சோனியை வைத்து பாப்புலராக விரும்புகிறது
இதையும் படிங்க Flipkart மெகா ஆபர் 65 இன்ச் இன்ச் கொண்ட TV வெறும் ரூ,50,000க்கும் குறைந்த விலையில்
பிளேஸ்டேஷன் உருவாக்கும் நிறுவனம் பல ஆணடுகளாக sony டெலிவிஷன் பிஸ்னஸ் சரிந்து உள்ளது மற்றும் உலகளவில் சந்தையில் இதன் பங்கு 2 சதவிதங்களை விட குறைவாக இருக்கிறது, தொலைக்காட்சி உற்பத்தி சந்தையில் கொரிய மற்றும் சீன நிறுவனங்கள் இப்போது ஆதிக்கம் செலுத்துகின்றன. மாறிவரும் இந்த நிலப்பரப்பு மற்றும் அதன் பிற பிஸ்னஸ்களில் அதிக கவனம் செலுத்தும் அதன் உத்திக்கு பதிலளிக்கும் விதமாக சோனி இந்த முக்கியமான முடிவை எடுத்துள்ளது.