சோனி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய HD LED டிவி அறிமுகம்.

சோனி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய HD LED டிவி அறிமுகம்.
HIGHLIGHTS

சோனி XR-85X95K அல்ட்ரா ஹெச்டி மினி எல்இடி டிவி இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

திய எல்இடி டிவி வில ரூ. 6 லட்சத்து 99 ஆயிரத்து 990 என துவங்குகிறது.

புதிய சோனி மினி எல்இடி டிவி XR மாடலில் காக்னிடிவ் பிராசஸர் XR வழங்கப்பட்டு இருக்கிறது

சோனி XR-85X95K அல்ட்ரா ஹெச்டி மினி எல்இடி டிவி இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய எல்இடி டிவி வில ரூ. 6 லட்சத்து 99 ஆயிரத்து 990 என துவங்குகிறது. இது இந்திய சந்தையில் அறிமுகமான முதல் மினி எல்இடி டிவிக்கள் ஆகும்.

புதிய சோனி மினி எல்இடி டிவி XR மாடலில் காக்னிடிவ் பிராசஸர் XR வழங்கப்பட்டு இருக்கிறது. இது சோனி நிறுவனத்தின் சொந்த சிப்செட் ஆகும். மேலும் இதில் XR பேக்லிட் மாஸ்டர் டிரைவ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு உள்ளது. இது பேக்லிட்டிங் மற்றும் லோக்கல் டிமமிங் போன்ற அம்சங்களை வழங்குகிறது.

இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கும் புதிய சோனி மினி எல்இடி டிவி மாடல் சாம்சங் மற்றும் டிசிஎல் பிராண்டு மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. அளவை பொருத்தவரை மினி டிஸ்ப்ளே தெழில்நுட்பம் கொண்ட டிவி மாடல் எல்ஜி நிறுவனத்தின் OLED டிவி மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

சிறப்பம்சங்கள்.

சோனி X95K சீரிஸ் டிவி 85 இன்ச் அளவில் கிடைக்கிறது. இதில் 3840×2160 பிக்சல் மினி எல்இடி டிஸ்ப்ளே பேனல் உள்ளது. இந்த டிவி காக்னிடிவ் பிராசஸர் XR மற்றும் XR பேக்லிட் மாஸ்டர் டிரைவ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது அதிநவீன மினி எல்இடி பேக்லைட்டிங் மற்றும் லோக்கல் டிம்மிங் உள்ளிட்டவைகளை கவனித்துக் கொள்கிறது. மேலும் அதில் ஹெச்டிஆர் 10 மற்றும் டால்பி விஷன், டால்பி அட்மோஸ் சவுண்ட் உள்ளது.

இந்த டிவி ஆண்ட்ராய்டு டிவி மென்பொருள் சார்ந்த கூகுள் டிவி யுஐ கொண்டிருக்கிறது. இத்துடன் கூகுள் அசிஸ்டண்ட், பில்ட்-இன் க்ரோம்காஸ்ட், ஆப்பிள் ஏர்பிளே, ஆப்பிள் ஹோம்கிட் வசதி, HDMI 2.1, 120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்: 

சோனி X95K மினி எல்இடி டிவி சீரிஸ் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இதன் உண்மை விலை ரூ. 8 லட்சத்து 99 ஆயிரத்து 990 ஆகும். ஆனால் பெஸ்ட் பை சலுகையின் கீழ் இந்த டிவி ரூ. 6 லட்சத்து 99 ஆயிரத்து 990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை சோனி செண்டர் ஸ்டோர் மற்றும் முன்னணி சில்லறை விற்பனை கடைகளில் நடைபெறுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo