Sony யின் முதல் True RGB LED TV அறிமுகம் வேற லெவல் பிக்ஜர் கிளியரிட்டி மற்றும் சவுண்ட் எபக்ட்

HIGHLIGHTS

சோனி அதன் புதிய Sony BRAVIA 7II இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது

இப்பொழுது நிறுவனம் இந்தியாவில் அதன் முதல் True RGB LED TV அறிமுகம் செய்தது

இந்த டிவியில் Dolby Atmos சவுண்ட் மற்றும் 4K 120fps கேமிங் சப்போர்ட் ஆகியவை வழங்கப்படுகிறது

ஒரு ப்ரியம் சினிமா தியேட்டர் போன்ற அனுபவம் பெற விரும்பும் பயனர்களுக்கு சோனி அதன் புதிய Sony BRAVIA 7II இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இப்பொழுது நிறுவனம் இந்தியாவில் அதன் முதல் True RGB LED TV அறிமுகம் செய்தது இதில் சிறப்பான படத் தரம், சக்திவாய்ந்த சவுண்ட் மற்றும் ஹை எண்டு கேமிங் அம்சங்களின் கலவை காணப்படுகிறது. மேலும் இந்த டிவியில் Dolby Atmos சவுண்ட் மற்றும் 4K 120fps கேமிங் சப்போர்ட் ஆகியவை வழங்கப்படுகிறது மேலும் இதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Sony BRAVIA 7II விலை தகவல்

Sony BRAVIA 7II-யின் 55-இன்ச் மாடலின் விலை ₹359,900 ஆகவும், புக்கிங் செய்யும் கஸ்டமர்களுக்கு அறிமுகச் சலுகை விலையாக ₹221,990 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 65-இன்ச் மாடலின் விலை ₹439,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, மேலும் அறிமுகச் சலுகையின் ஒரு பகுதியாக இதை ₹274,990-க்கு வாங்கலாம். இந்நிறுவனம் விரைவில் 75-இன்ச் , 85-இன்ச் மற்றும் 98-இன்ச் மாடல்களையும் அறிமுகப்படுத்த உள்ளது.

Sony BRAVIA 7II சிறப்பம்சம்.

BRAVIA 7II சீரிசானது சோனியின் RGB பேக்லைட் மாஸ்டர் டிரைவ் ப்ரோ டெக்னாலஜியில் இயக்கப்படுகிறது. இது சிவப்பு, பச்சை மற்றும் நீல நிற LED-க்களைத் தனித்தனியாகக் கட்டுப்படுத்தி, கலர் துல்லியம் மற்றும் வேரியண்டை மேம்படுத்துகிறது. சோனி இதை காக்னிட்டிவ் பிராசஸர் XR உடன் இணைத்துள்ளது. இது, மனிதனின் வியூவ் மற்றும் சவுண்ட் பவரை பிரதிபலிக்கும் வகையில் காட்சிகளைப் பகுப்பாய்வு செய்ய இந்த டிவியை அனுமதிக்கிறது. இந்தத் தொடரில், பரந்த பார்வைக் கோணங்கள் மற்றும் மேலும் விரிவான வண்ண மாற்றங்களுக்காக RGB டிரைலுமினோஸ் மேக்ஸ், ஸ்மூத் கலர் கிரேடேஷன் மற்றும் எக்ஸ்-வைட் ஆங்கிள் ப்ரோ தொழில்நுட்பங்களும் அடங்கும்.

இதையும் படிங்க Samsung யின் புதிய 2026 Vision AI TV அறிமுகம் இதில் OLED மற்றும் QLED யில் வித விதமாக கொண்டு வரப்பட்டுள்ளது விலை அம்சங்கள்

சோனி நிறுவனம் பிராவியா 7 II-ஐ 55-இன்ச் முதல் 98-இன்ச் வரையிலான ஸ்க்ரீன் சைஸ்களில் வழங்குகிறது. சினிமா தியேட்டர் போன்ற வியூவ் அனுபவத்திற்காக, இந்த டிவிகள் Dolby Vision, HDR10, HLG, IMAX என்ஹான்ஸ்டு, Dolby Atmos மற்றும் DTS பிள்ட்டர்களை சப்போர்ட் செய்கின்றன. பெரிய மாடல்களில் உள்ள அக்யூஸ்டிக் மல்டி-ஆடியோ+ தொழில்நுட்பம், ஸ்க்ரீனில் நடக்கும் செயல்களுடன் சவுண்ட் மிகவும் துல்லியமாகப் பொருத்துகிறது, அதே நேரத்தில் வாய்ஸ் ஜூம் 3, திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் போது கான்வேர்செஷன் தெளிவை மேம்படுத்துகிறது.

கேமர்களுக்காக, பிராவியா 7 II ஆனது HDMI 2.1 வழியாக 4K 120Hz கேமிங்கை ஆதரிக்கிறது. மேலும், இது வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ஆட்டோ லோ லேட்டன்சி மோடு ஆதரவையும் கொண்டுள்ளது. கேம் மெனு 2, டால்பி விஷன் கேமிங், PS ரிமோட் ப்ளே, ஆட்டோ HDR டோன் மேப்பிங் மற்றும் ஆட்டோ ஜானர் பிக்சர் மோடு போன்ற அம்சங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தத் டிவியில் கூகுள் டிவியில் இயங்குவதோடு, கூகுள் அசிஸ்டன்ட், ஆப்பிள் ஏர்பிளே 2, ஆப்பிள் ஹோம் கிட், குரோம்காஸ்ட் மற்றும் அலெக்ஸாவுடன் இணக்கமான சாதனங்களையும் சப்போர்ட் செய்கிறது . கூகுள் டிவிக்கான ஜெமினி ஒருங்கிணைப்பு, எதிர்கால சாப்ட்வேர் அப்டேட் மூலம் வரும் என்பதையும் சோனி உறுதிப்படுத்தியுள்ளது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :