SONY BRAVIA 2 II TV கம்மி விலையில் வாங்க சரியான நேரம் வெறும் ரூ,31,490 யில் வாங்கலாம்

Updated on 26-Jan-2026

Sony அதன் Sony Bravia 2 II சீரிஸ் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது இப்பொழுது இதன் 43 முதல் 75 இன்ச் வரை ஐந்து சைஸ்களில் அறிமுகப்படுத்தப்பட்டது, அப்போது ஆரம்ப விலை ₹50,990. இருப்பினும், இப்பொழுது இந்த டிவியின் கீழ் மிக சிறந்த ஆபர் வழங்கப்படுகிறது மேலும் விலைக் குறைப்புடன், கஸ்டமர்கள் பேங்க் சலுகைகளின் பலனையும் பெறலாம், இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கர்டில் குடியரசு தின சிறப்பு சலுகையின் மூலம் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் ஆபர் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க

Sony Bravia 2 II டிஸ்கவுண்ட் நன்மை.

பிளிப்கார்ட் குடியரசு தின 2026 விற்பனையின் ஒரு பகுதியாக, சோனி பிராவியா 2 II டிஸ்கவுண்ட் விலையில் விற்பனை செய்யப்படுகிறது . 43 இன்ச் வகை ₹37,490க்கும், 50 இன்ச் வகை ரூ,51,990க்கும், 55 இன்ச் வகை ரூ,55,990க்கும், 65 இன்ச் வகை ரூ,75,490க்கும், மிகப்பெரிய 75 இன்ச் வகை ₹107,990க்கும் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . இது அதன் அறிமுக விலையுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க விலைக் குறைப்பைக் குறிக்கிறது.

SONY BRAVIA 2 II

ஒப்பிடுகையில், அறிமுகப்படுத்தப்பட்டபோது , ​​சோனி பிராவியா 2 II 43-இன்ச் மாடலின் விலை ரூ.38,480 ஆகவும், மிகப்பெரிய 75-இன்ச் மாடலின் விலை ரூ.1,45,990 ஆகவும் இருந்தது.

இந்த சிறப்பு ஆபர் இத்துடன் முடிவடையவில்லை. பயனர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டை பயன்படுத்தினால், அளவைப் பொறுத்து கூடுதல் தள்ளுபடிகளைப் பெறலாம். எடுத்துக்காட்டாக, 43 இன்ச் சைஸ் ₹6,000 ஸ்டேடண்டர்ட் தள்ளுபடியைப் பெறலாம் , அதன் பிறகு இந்த டிவியை ரூ,31,490 ஆக இருக்கும். அதேபோல், 75 இன்ச் மாடலை ₹9,750 தள்ளுபடியில் பெறலாம், இதன் மூலம் நடைமுறை விலை ₹98,240 ஆக இருக்கும்.

Sony Bravia 2 II சிறப்பம்சம்.

Sony Bravia 2 II டிவி சீரிஸ் சோனி X1 பிக்சர் ப்ராசசர் உள்ளது. இந்த டிவியில் உள்ளமைக்கப்பட்ட 4K X-ரியாலிட்டி PRO அம்சமும் உள்ளது, இது FullHD மற்றும் 2K கன்டென்ட் 4Kக்கு நெருக்கமாகக் கொண்டுவருகிறது. பாஸ்ட் வியுவ்களுக்கு கூடுதல் பிரேம்களைச் சேர்ப்பதன் மூலம் மென்மையான டிஸ்ப்ளே வழங்கும் Motionflow XR தொழில்நுட்பத்தையும் இந்த டிவி பயன்படுத்துகிறது. சவுண்டை பொறுத்தவரை, டிவியில் டால்பி அட்மாஸ் மற்றும் DTS:X ஆடியோவை சப்போர்ட் 20W இரட்டை ஸ்பீக்கர்கள் உள்ளன.

அவை கூகிள் டிவியில் இயங்குகின்றன. கன்டென்ட் சர்ச்களுக்கு கூகிள் அசிஸ்டண்ட் வழியாக பயனர்கள் வொயிஸ் கமன்ட் சப்போர்ட்டை வழங்குகிறது . டிவிகள் ஆப்பிள் ஏர்ப்ளே மற்றும் ஹோம்கிட்டையும் சப்போர்ட் செய்கிறது. கேமிங்கிற்கு, அவை HDMI 2.1 வழியாக ஆட்டோ-லோ லேட்டன்சி மோடை கொண்டுள்ளன.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :