XIAOMI க்கு பிறகு இப்பொழுது ஒன்பிளஸ் அதன் TV விலையை அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

Xiaomi அதன் Mi மற்றும் Redmi டிவியின் பல மாடல்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன

ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த ஆண்டு Y சீரிஸ் டிவி மாடல்களை அறிமுகம் செய்தது

ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல்கள் விலை ரூ. 7 ஆயிரம் வரை அதிகரித்து இருக்கிறது.

Xiaomi  அதன் Mi மற்றும் Redmi டிவியின் பல மாடல்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன. டெலிவரி செயின் உள்ள சிக்கல்கள் காரணமாக நிறுவனம் இந்த முடிவை எடுத்தது, இதன் காரணமாக தொலைக்காட்சிகளின் விலை 3-6 சதவீதம் அதிகரித்தது. இப்போது சியோமிக்குப் பிறகு, ஒன்பிளஸ் டி.வி.களும் விலை உயர்ந்தன.

ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த ஆண்டு Y சீரிஸ் டிவி மாடல்களை அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து புதிய U1S ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது இரு டிவி சீரிஸ் விலையையும் ஒன்பிளஸ் உயர்த்தி இருக்கிறது. அதன்படி ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல்கள் விலை ரூ. 7 ஆயிரம் வரை அதிகரித்து இருக்கிறது.

ஒன்பிளஸ் டிவி புது விலை விவரம்

ஒன்பிளஸ் டிவி Y1 32 இன்ச் ரூ. 18,999
ஒன்பிளஸ் டிவி Y1 40 இன்ச் ரூ. 26,499
ஒன்பிளஸ் டிவி Y1 43 இன்ச் ரூ. 29,499
ஒன்பிளஸ் டிவி U1S 50 இன்ச் ரூ. 46,999
ஒன்பிளஸ் டிவி U1S 55 இன்ச் ரூ. 52,999
ஒன்பிளஸ் டிவி U1S 65 இன்ச் ரூ. 68,999

ஸ்மார்ட் டிவி மாடல்களின் புதிய விலை ஒன்பிளஸ் மற்றும் அமேசான் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :