பட்ஜெட் விலையில் கிடைக்கும் புதிய டி.வி. 32 இன்ச் HD, 40 இன்ச் ஃபுல் .HD மற்றும் 50 இன்ச் ஃபுல் HD வேரியன்ட்களில் கிடைக்கிறது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் கிடைக்கும் புதிய டி.வி. 32 இன்ச் HD, 40 இன்ச் ஃபுல் .HD மற்றும் 50 இன்ச் ஃபுல் HD வேரியன்ட்களில் கிடைக்கிறது.
ஆன்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்கும் ஸ்மார்ட் டி.வி. மாடல்களில் ஆப்டொய்ட் ஆப் ஸ்டோர் வழங்கப்பட்டுள்ளது. பயனர்கள் இதில் இருந்து செயலிகளை டவுன்லோடு செய்து கொள்ளலாம். இதன் வயர்லெஸ் கன்ட்ரோல் வசதி கொண்டு ஸ்மார்ட்போன்களை டி.வி.யுடன் எளிமையாக இணைத்து, முழு டி.வி. மற்றும் கேம்களை விளையாட முடியும்.
மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 3 ஸ்மார்ட் டி.வி. 32 இன்ச் வேரியன்ட் விலை ரூ.13,999 என்றும், 40 இன்ச் ஃபுல் ஹெச்.டி. மாடல் ரூ.19,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேன்வாஸ் 3 ஸ்மார்ட் டி.வி. 50 இன்ச் விலை விரைவில் நிர்ணயம் செய்யப்படுகிறது. புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.