Hisense E8S Pro TV
Hisense அதன் E8S Pro Mini-LED TV சீரிஸ் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது, இது ஹை எண்டு 4K யின் மிக சிறந்த டிஸ்ப்ளே மற்றும் பர்போமான்ஸ் கொண்டிருக்கும், இதில் 75 இன்ச், 85 இன்ச் மற்றும் அதற்க்கு அதிகமாக 100-இன்ச் சைஸ் வரை இருக்கிறது மேலும் இந்த டிவியில் 170Hz வரையிலான ரெப்ரஸ் ரேட் வழங்குகிறது மேலும் இந்த டிவியில் RGB மினி LED டிஸ்ப்ளே வழங்குகிறது மேலும் இந்த டிவியின் அம்சங்கள் மற்றும் விலை தகவலை
Hisense E8S Pro சீனாவில் JD.comமற்றும் பல ஆன்லைன் கடைகளில் கொண்டுவரப்பட்டது
Hisense E8S Pro TV மூன்று சைஸில் வருகிறது, அதில் 75, 85, and 100-இன்ச்-சைஸ் வரை இருக்கும், மேலும் இதில் Mini-LED பேக்லைட் 4,200, 7,020, மற்றும் 9,360 லோக்கல் டிம்மிங் ஜோன்ஸ் வழங்கப்படுகிறது, இதில் LEDக்கு பதிலாக RGB Mini-LEDs டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, மேலும் இதில் குவாண்டம் கலர் லேயர் உடன் தெளிவான கலர் மற்றும் ப்ரைட்னாஸ் வழங்கப்படுகிறது.
108-பிட் கலர் டெப்த் மற்றும் 99% கலர் தூய்மையுடன் கூடிய BT.2020 கலர் வரம்பின் முழு கவரேஜ் மற்றும் அதன் proprietary XDR Pro அப்டேட் மூலம் Hisense 6,200 nits ஹை ப்ரைட்னாஸ் கூறுகிறது. இந்த அமைப்பு தீங்கு விளைவிக்கும் நீல லைட் எமர்சன் 42% வரை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க Acer TV Offer: ஏசர் மெகா ஆபரின் கீழ் வெறும் ரூ,8,999 யில் TV வாங்கலாம்
மேலும் இந்த டிவியில் MediaTek’s MT9655 சிப்செட்டுடன் 4GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது, பிக்ஜர் ப்ரோசெசிங் ஹைசென்ஸின் ஹை-வியூ எஞ்சின் H7 கையாளுகிறது, இது பிக்சல்-நிலை டிஸ்ப்ளே அங்கீகாரம், டோன் மேப்பிங் மற்றும் நோய்ஸ் குறைப்புக்கு AI ஐப் பயன்படுத்துகிறது. கனெக்ஷன் விருப்பங்களில் Wi-Fi 6, Bluetooth 5.4, USB 3.0 மற்றும் 2.0 போர்ட்கள் அடங்கும். ஈதர்நெட் மற்றும் AV உள்ளீடும் கிடைக்கிறது.
ஒலியைப் பற்றிப் பேசுகையில், இந்த டிவி 4.2.2 சேனல் சவுண்ட் அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் பிரெஞ்சு ஆடியோ பிராண்டான டெவியலெட்டுடன் இணைந்து இதை உருவாக்கியது. இது 270W வரை மின் வெளியீட்டை வழங்க முடியும். இது டால்பி அட்மாஸ், டிடிஎஸ்:எக்ஸ் மற்றும் ஐமாக்ஸ் மேம்படுத்தப்பட்டவற்றையும் ஆதரிக்கிறது