Vodafone Idea 5G சேவை இந்த 5 இடங்களுக்கு கிடைக்கும் போட்டிக்கு ரெடியாகும் நிறுவனம்

Updated on 08-Apr-2025

Vodafone Idea (Vi) அதன் 5G சேவையை மார்ச் மாதம் அறிமுகம் செய்தது. அந்த வகையில் இந்த டெலிகாம் நிறுவனம் ஏப்ரல் 2025 யில் மும்பை வட்டாரத்தில் கொண்டுவந்தது, அதனை தொடர்ந்து இப்பொழுது VI அதன் 5G சேவையை இன்னும் பல வட்டாரங்களில் அறிமுகம் செய்வதாக உருதி செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தின் அதிகாரபூர்வ வெப்சைட்டின் படி இந்த 5G சேவையானது டெல்லி,கர்நாடகா,பீகார் மற்றும் பஞ்சாப் உட்பட இந்த 5 நாட்டில் இப்பொழுது 5G சேவையானது கிடைக்கும், ஆனால் இதை தவிர இந்த மாதம் இன்னும் 5G வட்டாரங்கல் சேர்க்கப்படுமா என கூறவில்லை.

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட 5G வெளியீட்டிற்கான குறைந்தபட்ச வெளியீட்டு கடமைகளை (MRO) Vi ஏற்கனவே பூர்த்தி செய்துள்ளது. இப்போது ஏர்டெல் மற்றும் ஜியோவுடன் போட்டியிட தொலைத்தொடர்பு நிறுவனம் ரேடியோக்கள் மற்றும் 5G தளங்களை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.

Vodafone Idea கூடுதல் கட்டணமின்றி 5G சேவை வழங்கப்படுகிறது.

வோடபோன் ஐடியா அதன் கஸ்டமர்களுக்கு எந்த வித கூடுதல் கட்டமின்றி அதன் 5G ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது, இதன் விலை ரூ,299 மற்றும் பல ஆகும் அந்த வகையில் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் ஆரம்ப விலைப் ரூ,451 ஆகும், இதில் குறிபிடத்தக்க விஷயம் என்னவென்றால் இதில் அன்லிமிடெட் 5G என இருந்தாலும் இதில் அன்லிமிடெட் 5G கிடைக்காது இது கஸ்டமர்களுக்கு 300GB டேட்டா உடன் இதன் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கும்.

Vi ரூ,299 திட்டம்

VI யின் இந்த புதிய திட்டம் ரூ,299 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டமாகும் 1GB டேட்டா உடன் இதில் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மையும் பெறலாம் இதுமட்டுமில்லாமல் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்குகிறது, இந்த திட்டத்தின் வேலிடிட்டியை பற்றி பேசுகையில் இது 28 நாட்களுக்கு வருகிறது மேலும் இதன் டேட்டா லிமிட் குறையும்போது 64Kbpsஆக ஸ்பீட் குறையும்

வோடபோன் ஐடியா நிறுவனம், இந்தியா முழுவதும் 5G வெளியீடு மற்றும் 4G விரிவாக்கத்திற்காக, ஈக்விட்டியிலிருந்து திரட்டிய நிதியை, அளவு மூலதனச் செலவினமாக (மூலதனச் செலவு) பயன்படுத்துகிறது. டெலிகாம் நிறுவனம் பயனர்களுக்காக 5G NSA (தனித்தனி அல்லாத கட்டமைப்பு) ஐப் பயன்படுத்துகிறது. 5G NSA 4G அடுக்கின் மேல் செயல்படுகிறது மற்றும் நாட்டில் உள்ள ஒவ்வொரு 5G தொலைபேசியுடனும் வேலை செய்யும்.

இதையும் படிங்க VI யின் 5G திட்டம் ரூ,299 யில் அறிமுகம் இனி ஜாலியா அன்லிமிடெட் 5G நன்மை பெற முடியும் ஆனால் இவர்களுக்கு மட்டும் தான்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :