Vodafone Idea வெறும் ரூ,100க்கும் குறைந்த விலையில் புதிய திட்டம் அறிமுகம் அன்லிமிடெட் காலிங் டேட்டா எல்லாம் உண்

Updated on 11-Jul-2025
HIGHLIGHTS

Vodafone Idea இந்தியாவின் மூன்றாவது டெலிகாம் நிறுவனமாகும்

இதன் விலை ரூ,100 விட குறைந்த விலையில் வருகிறது,

வோடபோன் ஐடியாவின் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம் 200MB டேட்டாவுடன் வருகிறது

Vodafone Idea இந்தியாவின் மூன்றாவது டெலிகாம் நிறுவனமாகும் இதன் விலை ரூ,100 விட குறைந்த விலையில் வருகிறது, இந்த திட்டம் ஒரு ஷோர்ட் டெர்ம் வேலிடிட்டி திட்டமாக இருக்கும், மேலும் பல நிறுவனங்கள் அதன் திட்டத்தின் விலை உயர்த்தினாலும் இதன் வோடபோன் ஐடியாவின் இந்த திட்டத்தின் விலை ரூ,98 யில் வருகிறது இந்த திட்டத்தின் நன்மை அனைத்தையும் பார்க்கலாம் வாங்க.

Vodafone Idea ரூ,98 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியாவின் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம் 200MB டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டம் 10 நாட்கள் மட்டுமே சேவை வேலிடிட்டியை வழங்கும். நிறுவனம் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்கை வழங்குகிறது மற்றும் எந்த இதுல அவுட்கோயிங் SMSகளையும் வழங்காது. ஒதுக்கீடு முடிந்த பிறகு டேட்டா கட்டணம் MBக்கு 50 பைசாவாக வசூலிக்கப்படும். இந்த திட்டத்தைப் பயன்படுத்துவதற்கான தினசரி செலவு ரூ.9.8 ஆகும்.

இதன் திட்டமானது நீங்கள் ஒரு 10 நாட்களுக்கு ரீசார்ஜ் தொல்லை இல்லாமல் இருக்க நினைத்தாள் அவர்களுக்கு இந்த திட்டம் பெஸ்ட்டாக இருக்கும் அதாவது இந்த திட்டம் சிம் எக்டிவாக வைக்க உதவும்.மேலும் இது vodafone idea யின் மிகவும் குறைந்த விலை திட்டமாகும்.

Airtel ரூ,189 ப்ரீபெய்ட்

அதே போல சமிபத்தில் ஏர்டெல் அதன் கஸ்டமர்களுக்கு ரூ,189 யில் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது, இதன் வேலிடிட்டி 21 நாட்களுக்கு சேவை வேலிடிட்டி வழங்குகிறது. இதனுடன் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 1GB யின் டேட்டா உடன் 300 SMS வழங்கப்படுகிறது, ஆனால் நீங்கள் அதிக டேட்டா பெற விரும்பினால் இந்த திட்டமானது உங்களுக்கு ஏற்றதாக இருக்காது இருப்பினும் ஒரு குறைந்த அளவு டேட்டா மற்றும் 21 நாட்களுக்கு எந்த ஒரு ரீசார்ஜ் தொல்லையும் இல்லாமல் இருக்கலாம்.

இதையும் படிங்க Airtel யின் புதிய ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம் நன்மை நீங்களே பாத்து தெருஞ்சிகொங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :