Vi 5G சேவை நாளை டெல்லி NCR வருகிறது, இதன் ஆரம்ப விலையோ மிக மிக குறைவு தான்

Updated on 14-May-2025
HIGHLIGHTS

Vodafone Idea (Vi) அதன் கஸ்டமர்களுக்கு புதிய ஹை ஸ்பீட் 5G சேவை டெல்லி NCR வருகிறது

இது மே 15 நாடெங்கும் 5G சேவை தொடங்கும் அதில் முக்கிய நகரமாக ,மும்பை,சண்டிகர் மற்றும் பட்னா உட்பட பல அடங்கும்

பெங்களூரு மற்றும் மைசூரு போன்ற நகரங்கள் மேப்பில் அடுத்த இடத்தில் உள்ளன

Vodafone Idea (Vi) அதன் கஸ்டமர்களுக்கு புதிய ஹை ஸ்பீட் 5G சேவை டெல்லி NCR வருகிறது மேலும் இது மே 15 நாடெங்கும் 5G சேவை தொடங்கும் அதில் முக்கிய நகரமாக ,மும்பை,சண்டிகர் மற்றும் பட்னா உட்பட பல அடங்கும் நகரங்களில் ஏற்கனவே Vi யின் 5G யில் காலடி எடுத்து வைத்துள்ளது மேலும் இதை பற்றி புதன்கிழமை மே 14, 2025. அறிவித்துள்ளது

Vi 5G சேவை பல நகரங்களுக்கு அதிகரிப்பு

டெலிகாம் ஆபரேட்டர் தனது 5G சேவைகளை ஆகஸ்ட் 2025க்குள் 5G ஸ்பெக்ட்ரத்தை வாங்கிய 17 முக்கிய வட்டங்களிலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. பெங்களூரு மற்றும் மைசூரு போன்ற நகரங்கள் மேப்பில் அடுத்த இடத்தில் உள்ளன என்றும், மற்ற முக்கிய சந்தைகளில் ஏற்கனவே வெளியீடுகள் நடந்து வருவதாகவும் Vi கூறுகிறது. மும்பையில், தகுதியுள்ள பயனர்களில் 70 சதவீதம் பேர் அதன் 5G சேவைகளை அனுபவித்து வருவதாகவும், நகரத்தின் டேட்டா போக்குவரத்தில் 20 சதவீதம் தற்போது 5G நெட்வொர்க்கில் இயங்குவதாகவும் Vi தெரிவித்துள்ளது.

Vi 5G ரீசார்ஜ் திட்டம்

நிறுவனம் Vi 5G திட்டத்தின் கீழ் ரூ,299 யில் வருகிறது இதில் அன்லிமிடெட் டேட்டா உடன் 5G நன்மை பெற முடியும் இதன் மூலம் நிறுவனம் அதிகபட்ச டவுன்லோட் ஸ்பீட் வழங்கும் உடன் அதிக இன்டர்நெட் வழங்கும் மேலும் இதன் மூலம் வீடியோ ஸ்ட்ரீமிங் அம்சம் மிக சிறப்பாக பெற முடியும் இதனுடன் களவுட் அக்சஸ் நன்மை பெறலாம்

டெல்லி NCR-யில், மேம்பட்ட ஆற்றல் பவர் கொண்ட 5G உள்கட்டமைப்பை உருவாக்க Vi எரிக்சனுடன் கூட்டு சேர்ந்துள்ளது. நிறுவனம் 5G அல்லாத தனித்த (NSA) கட்டமைப்பைப் பயன்படுத்துகிறது, இது 4G மற்றும் 5G நெட்வொர்க்குகளுக்கு இடையில் தடையற்ற மாற்றத்தை அனுமதிக்கிறது. கூடுதலாக, பர்போமன்சை மேம்படுத்தவும் பயனர் அனுபவத்தை மேம்படுத்தவும் AI- இயங்கும் சுய-ஒழுங்கமைக்கும் நெட்வொர்க் (SON) தொழில்நுட்பத்தை செயல்படுத்தியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க JioFiber யின் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் பெஸ்ட் திட்டம் அன்லிமிடெட் இன்டர்நெட் மஜா

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :