Unlimited Data
Vodafone Idea (VI) இந்தியாவின் மூன்றாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும் இந்த திட்டம் ஒரு குறைந்த விலையில் வரும் டேட்டா வவுச்சர் திட்டத்தை கொண்டு வந்துள்ளது அது ரூ,99 யில் வருகிறது, இதனுடன் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் டேட்டா போன்ற பல நன்மை வழங்கப்படுகிறது, ஆனால் வோடபோன் ஐடியாவின் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் டேட்டா எனவும் சொல்லிவிட முடியாது மேலும் இந்த திட்டத்தில் இருக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
வோடபோன் ஐடியா ரூ.99 டேட்டா வவுச்சர் அன்லிமிடெட் டேட்டாவுடன் வருகிறது, மேலும் இந்த டேட்டா உண்மையில் அன்ளிமிடேட்டானது அல்ல. டேட்டா ஒரு நாளைக்கு 20 ஜிபி என அதிகபட்சமாக வழங்கப்படுகிறது. இந்த வவுச்சர் 2 நாட்கள் செல்லுபடியாகும். எனவே அடிப்படையில், இந்த திட்டத்துடன் மொத்த டேட்டாவில் 40 ஜிபி பெறுவீர்கள். ஒவ்வொரு நாளும் 20 ஜிபி FUP (நியாயமான பயன்பாட்டுக் கொள்கை) டேட்டாவை பயன்படுத்திய பிறகு, ஸ்பீட் 64 Kbps ஆகக் குறைகிறது.
இதையும் படிங்க:வேற லெவல் மஜா தான் Jio வில் வெறும் ரூ,450க்குள் வரும் இந்த திட்டத்தில் ஒரு குடும்பமே செம்ம ஜாலியா இருக்கலாம்
VI ரூ,69 திட்டமானது அடுத்த குறைந்த விலையில் வரும் டேட்டா வவுச்சர் திட்டமாகும் மேலும் இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 3GB டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் வழங்குகிறது குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி பெற விரும்பினால் இது பெஸ்ட்டாக இருக்கும் இதை தவிர இந்த திட்டத்தில் கூடுதல் சேவை ஏதும் கிடைக்காது