vodafone-idea
நீங்கள் Vodafone Idea (VI) கஸ்டமராக இருந்தால் இந்த திட்டம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது, இந்த திட்டத்தின் விலை ரூ,548 ஆகும். இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் டேட்டா போன்ற பல நன்மைகள் வழங்கப்படுகிறது மேலும் தனியார் டெலிகாம் நிறுவனங்களில் மூன்றாவது மிக பெரிய நிறுவனமான வோடபோன் ஐடியா மற்ற நிறுவனங்களுடன் போட்டி போடும் விதமாக பல திட்டங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது அந்த வகையில் இந்த ரூ,548 யில் வரும் திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.548 திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது கால அவகாசத்தை வழங்குகிறது . கஸ்டமர்கள் எந்த நெட்வொர்க்கிலும் 84 நாட்களுக்கு அன்லிமிடெட் காலிங் மற்றும் 1,000 இலவச SMS ஆகியவற்றை அனுபவிக்க முடியும். டேட்டாவைப் பொறுத்தவரை, இந்தத் திட்டம் மொத்தம் 7 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. டேட்டாவில் தினசரி லிமிட் இல்லை, அதாவது உங்கள் தேவைக்கேற்ப இதைப் பயன்படுத்தலாம். வாட்ஸ்அப், யுபிஐ, ஈமெயில் அல்லது அவ்வப்போது பிரவுசிங் போன்ற உங்கள் ஆப் குறைவாக இருந்தால், இந்தத் டேட்டா போதுமானதாக இருக்கலாம். மேலும், இந்தத் திட்டத்தில் விஐ மூவிஸ் & டிவிக்கான இலவச அக்சஸ் நிறுவனம் வழங்குகிறது.
இதையும் படிங்க:Airtel யின் புதிய திட்டம் 84 நாட்களுக்கு அன்லிமிடெட் 4G மற்றும் 5G டேட்டா, காலிங் போன்ற பல நன்மை
இந்த திட்டமானது இரண்டாவது சிம்மக வோடபோன் ஐடியாவின் சிம் பயன்படுத்தினால் அன்லிமிடெட் காலிங் வசதிகள் மட்டுமே தேவைப்படுபவர்களுக்கு இந்த திட்டம் ஒரு நல்ல தேர்வாகும். மேலும், உங்கள் எண்ணை செயலில் வைத்திருக்க விரும்பினால், அதிக இணைய இணைப்பு தேவையில்லை என்றால், இது ஒரு நல்ல தேர்வாகவும் இருக்கலாம்.