Tariff Hike 2025 today Vodafone idea vi hiked 509 plan to rs 548
Vodafone Idea (VI) அதன் மிகவும் பாப்புலர் திட்டத்தின் விலையை அதிகரித்து மிக பெரிய ஷாக் கொடுத்துள்ளது, வோடபோன் அடியா அதன் திட்டத்தை மீண்டும் உயர்த்தியுள்ளது, வோடபோன் ஐடியாவின் ப்ரீபெய்ட் திட்டங்களுக்கான விலை உயர்வு பயனர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். நிறுவனத்தின் ₹509 திட்டத்தின் விலை இப்போது ₹548 ஆகும். இருப்பினும், விலை உயர்வுடன், நிறுவனம் வழங்கும் டேட்டாவையும் அதிகரித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தின் நன்மைகளை பத்தி பார்க்கலாம் வாங்க.
வோடபோன் ஐடியாவின் இந்த திட்டம் குறைந்த விலையில் நீண்ட வேலிடிட்டியை வழங்கும் எதிர்பார்க்கும் பயனர்களுக்கு ரூ.509 திட்டம் ஒரு நல்ல தேர்வாக இருந்தது. இதில் அன்லிமிடெட் வொயிஸ் கால்கள், 1000 SMS மற்றும் பயனரின் வட்டத்தைப் பொறுத்து 6 ஜிபி அல்லது 9 ஜிபி டேட்டாவை வழங்கியது. இதன் வேலிடிட்டி காலம் 84 நாட்களாகவே இருந்தது, அதனால்தான் இந்த திட்டம் பட்ஜெட் பயனர்களிடையே பிரண்ட்லியாக தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒதுக்கீட்டிற்குப் பிறகு டேட்டா பயன்பாடு ஒரு எம்பிக்கு 50 பைசாவாக வசூலிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கம்மி விலையில் அதிக நன்மை Jio அம்பானி மக்கள் மனச கவுத்துடாங்கப்பா காலிங்,டேட்டா போன்ற பல நன்மை
வோடபோன் ஐடியா (Vi) நிறுவனம் 84 நாட்கள் வேலிடிட்டி உடன் குறைந்த விலை ப்ரீபெய்ட் திட்டங்களில் ஒன்றாக இருந்தது ஆனால் இப்பொழுது அதன் கஸ்டமர்களுக்கு மற்றொரு மிக பெரிய அடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் விலை முன்பு ரூ.509 ஆக இருந்தது, ஆனால் இப்பொழுது இந்த திட்டத்தின் விலை ரூ.548 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த திட்டத்தின் விலை முன்பை விட ரூ.39 அதிகரித்துள்ளது.நிறுவனத்தின் இந்த திட்டத்தின் நன்மைகளைப் பற்றி பேசுகையில், இது அன்லிமிடெட் வொயிஸ் கால்கள், 1000 SMS மற்றும் டேட்டாவை வழங்குகிறது. விலை அதிகரிப்புடன், திட்டத்தில் உள்ள தட்டவும் சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த திட்டம் வட்டத்தைப் பொறுத்து 6 ஜிபி அல்லது 9 ஜிபி மொபைல் டேட்டாவை வழங்கியது. டேட்டா லிமிட் தீர்ந்துவிட்டால், ஒரு எம்பிக்கு 50 பைசா கட்டணம் வசூலிக்கப்பட்டது. இப்போது, இது 7 ஜிபி அல்லது 10 ஜிபி டேட்டாவை வழங்கும். இந்த புதிய விலையுடன், திட்டத்தின் தினசரி தோராயமாக ரூ.6.52 ஆக அதிகரித்துள்ளது