Vodafone Idea
இந்தியாவின் மூன்றாவது பெரிய தனியார் டெலிகாம் நிறுவனமான Vodafone Idea (Vi), வெறும் ரூ,369க்கு குறைந்த விலையில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் கஸ்டமர்களுக்கு காலிங் மற்றும் டேட்டா சலுகைகளுடன் 56 நாட்கள் வேலிடிட்டி. வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் குறைந்த விலையில் டேட்டா, காலிங் போன்ற பல நன்மை வழங்கும்.
Vi- யின் ரூ.369 திட்டம் கஸ்டமர்களுக்கு 56 நாட்கள் சேவை வேலிடிட்டியை வழங்குகிறது. இந்த காலகட்டத்தில், கஸ்டமர்கள் எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் வொயிஸ் கால்களிலிருந்து பயனடைவார்கள். நிறுவனம் 600 இலவச SMS-ஐயும் வழங்குகிறது. டேட்டாவை பொறுத்தவரை, இந்தத் திட்டம் மொத்தம் 4GB டேட்டாவை வழங்குகிறது, பயனர்கள் தேவைப்படும் போதெல்லாம் இதைப் பயன்படுத்தலாம்.
இதையும் படிங்க நாள் குருசாச்சு Google புதிய போன் இந்த தேதியில் அற்முகம் அம்சங்கள் மற்றும் தகவலை பாருங்க
அதிக டேட்டா தேவையில்லாத, காளிங்கை அதிகம் நம்பியிருக்கும் கஸ்டமர்களுக்கு இந்த ரீசார்ஜ் திட்டம் சிறந்த தேர்வாகும். கூடுதலாக, குறைந்த செலவில் தங்கள் நம்பரை நீண்ட காலத்திற்கு செயலில் வைத்திருக்க விரும்புவோருக்கு அல்லது வோடபோன் ஐடியா செகண்டரி சிம்மாக பயன்படுத்துபவர்களுக்கு இந்த திட்டம் ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.