Vodafone Idea
மூன்றாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Vodafone Idea (VI) அதன் கஸ்டமர்களுக்கு பல புது புது திட்டங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது அதில் இந்த திட்டங்கள் விலையுயர்ந்த வருடாந்திர திட்டங்கள் முதல் குறைந்த விலை மாதாந்திர திட்டங்கள் வரை பல்வேறு வகைகளில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், தங்கள் நமாபாரி செயலில் வைத்திருக்க அல்லது காளிர்க்காக மட்டுமே ரீசார்ஜ் செய்யும் பல பயனர்கள் உள்ளனர். இந்த அவர்களுக்காக, நிறுவனம் ரூ,200 விலையில் மூன்று திட்டங்களை கொண்டு வந்துள்ளது அந்த திட்டங்களில் வரும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க..
Vi நிறுவனம் தனது கஸ்டமர்களுக்கு ரூ.179 திட்டத்தை வழங்குகிறது, இது நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவில் அன்லிமிடெட் பிரிவில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இதன் வேலிடிட்டி காலம் 24 நாட்கள். இந்த நேரத்தில், கஸ்டமர் எந்த நெட்வொர்க்கில் இருந்து அன்லிமிடெட் கால் 300 இலவச SMS-ஐயும் அனுபவிக்க முடியும். இருப்பினும், இந்த திட்டம் 1GB டேட்டாவை மட்டுமே வழங்குகிறது. கூடுதலாக, நிறுவனம் Vi மூவிஸ் & டிவி செயலிக்கான இலவச அணுகலை வழங்குகிறது. எனவே, உங்கள் நம்பரை செயலில் வைத்திருக்க வேண்டும் அல்லது அதிக டேட்டா தேவையில்லை என்றால், இந்ததிட்டம் உங்களுக்கு பெஸ்ட்டாக இருக்கும்.
Vi ரூ.189 திட்டமும் உள்ளது. இந்த திட்டம் 26 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது . எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் கால்கள் , 300 இலவச SMS மற்றும் 1GB டேட்டா ஆகியவை நன்மைகளில் அடங்கும். கூடுதல் சலுகைகள் எதுவும் இல்லை.
Vi-வில் 28 நாட்கள் முழு வேலிடிட்டி உடன் வருகிறது இந்த திட்டத்தின் விலை ரூ.199 உள்ளது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், 300 இலவச SMS மற்றும் மொத்தம் 2GB டேட்டாவை வழங்குகிறது. கூடுதலாக, Vi Movies & TV ஆப்களுக்கான இலவச அக்சஸ் நீங்கள் பெறலாம் .