VI (வோடபோன் ஐடியா) ஆட் ஆன் பிரீபெயிட் சலுகை அறிவிப்பு

Updated on 19-Nov-2020
HIGHLIGHTS

VI (வோடபோன் ஐடியா) நிறுவனம் இந்திய சந்தையில் ஆட் ஆன் பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

ரூ. 32 துவங்கி ரூ. 103 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

VI (வோடபோன் ஐடியா) நிறுவனம் இந்திய சந்தையில் ஆட் ஆன் பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 32 துவங்கி ரூ. 103 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

VI ரூ. 32 ஆட் ஆன் சலுகையில் 28 நாட்களுக்கு 200 பிரபல கேம்களை விளம்பரங்கள் இன்றி விளையாட முடியும். ஸ்போர்ட்ஸ் ப்ரியர்களுக்கென ரூ. 42 சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது. இது 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் பயனர்களுக்கு விளையாட்டு விவரங்கள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும்.

கான்டெஸ்ட் பேக் என அழைக்கப்படும் ரூ. 43 சலுகையில் போட்டிகளில் கலந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. போட்டிகளில் கலந்து கொண்டு ரீசார்ஜ் மற்றும் கோல்டு வவுச்சர்களை வெல்ல முடியும். இதேபோன்ற சலுகை ரூ. 52 விலையில் வழங்கப்படுகிறது. 

இதில் பாலிவுட் பிரபலங்களுடன் நேரலையில் சாட் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. வி ஆட் ஆன் சலுகைகளை நீண்ட வேலிடிட்டியுடன் பெற விரும்புவோருக்கு ரூ. 62, ரூ. 72, ரூ. 73 மற்றும் ரூ. 103 விலையில் வழங்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :