Airtel அடுத்து Jio உடன் கைகோர்த்த SpaceX இனி Starlink மூலம் இந்தியா அதிவேக இன்டர்நெட்டுக்கு பஞ்சமில்லை

Updated on 12-Mar-2025

Jio Platforms Limited (JPL) மார்ச் 12 புதன்கிழமை அன்று SpaceX உடனான ஒப்பந்தம் கையெழுத்து செய்யப்பட்டுள்ளது, இதன் மூலம் Starlink யின் இன்டர்நெட் சேவை இந்தியாவிற்கு கொண்டு வரும்.”இந்தியாவில் ஸ்டார்லிங்கை விற்க ஸ்பேஸ்எக்ஸ் அதன் சொந்த அங்கீகாரங்களைப் பெறுவதற்கு உட்பட்ட இந்த ஒப்பந்தம், ஜியோ மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவை ஸ்டார்லிங்க் ஜியோவின் சலுகைகளை எவ்வாறு நீட்டிக்க முடியும் மற்றும் ஜியோ எவ்வாறு ஸ்பேஸ்எக்ஸின் நேரடி சலுகைகளை கன்ச்யுமார் மற்றும் பிஸ்னஸ் பூர்த்தி செய்ய முடியும் என்பதை ஆராய உதவுகிறது” என்று ரிலையன்ஸ் ஜியோ வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

Jio SpaceX ஒப்பந்தத்தின் கீழ் என்ன பயன்

ஜியோ தனது ரீடைளர் விற்பனை நிலையங்கள் மூலமாகவும், ஆன்லைன் ஸ்டோர்ஃபிரண்டுகள் மூலமாகவும் ஸ்டார்லிங்க் தீர்வுகளை கிடைக்கச் செய்யும். ஜியோ தனது ரீடைலர் விற்பனை நிலையங்களில் ஸ்டார்லிங்க் உபகரணங்களை வழங்கும் மற்றும் கஸ்டமர் சேவை, இன்ஸ்டலேசன் மற்றும் ஏக்டிவேசனுக்கு உதவ ஒரு பொறிமுறையை நிறுவும்.

“இந்த ஒப்பந்தத்தின் மூலம், தரவு போக்குவரத்தில் உலகின் மிகப்பெரிய மொபைல் ஆபரேட்டராக ஜியோவின் நிலையையும், உலகின் முன்னணி குறைந்த பூமி ஒர்பிட் சேட்லைட் தொகுப்பான ஸ்டார்லிங்கின் நிலையையும் பயன்படுத்தி , இந்தியாவின் மிகவும் கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகள் உட்பட நாடு முழுவதும் நம்பகமான பிராட்பேண்ட் சேவைகளை வழங்குவார்கள் ” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

Reliance Jio யின் CEO க்ரூப் தலைவரான மேத்திவ் ஊம்மேன் இந்த கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, “ஒவ்வொரு இந்தியரும், அவர்கள் எங்கு வாழ்ந்தாலும், குறைந்த விலையில் மற்றும் அதிவேக பிராட்பேண்ட் அணுகலை உறுதி செய்வது ஜியோவின் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது” என்று கூறினார். “ஸ்டார்லிங்கை இந்தியாவிற்கு கொண்டு வர ஸ்பேஸ்எக்ஸ் உடனான எங்கள் ஒத்துழைப்பு எங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது மற்றும் அனைவருக்கும் தடையற்ற பிராட்பேண்ட் கனேக்சனை நோக்கி ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஜியோவின் பிராட்பேண்ட் எகொசிச்டம் அமைப்பில் ஸ்டார்லிங்கை ஒருங்கிணைப்பதன் மூலம், இந்த AI-இயக்கப்படும் சகாப்தத்தில், நாடு முழுவதும் உள்ள சமூகங்கள் மற்றும் பிச்னச்களை மேம்படுத்துவதன் மூலம், எங்கள் வரம்பை விரிவுபடுத்துகிறோம் மற்றும் அதிவேக பிராட்பேண்டின் நம்பகத்தன்மை மற்றும் அணுகலை மேம்படுத்துகிறோம்.”

இதேபோன்ற உணர்வுகளை எதிரொலிக்கும் வகையில், SpaceX தலைவரும் COO ஆன க்வின் ஷாட்வெல், “இந்தியாவின் கனேக்சனை மேம்படுத்துவதில் ஜியோவின் உறுதிப்பாட்டை நாங்கள் பாராட்டுகிறோம்” என்றார். “ஸ்டார்லிங்கின் அதிவேக இன்டர்நெட் சேவைகளை அணுகுவதற்கு அதிகமான மக்கள், நிறுவனங்கள் மற்றும் பிஸ்னஸ் வழங்க ஜியோவுடன் இணைந்து பணியாற்றவும், இந்திய அரசிடமிருந்து அங்கீகாரத்தைப் பெறவும் நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.”

இதையும் படிங்க:Jio சூப்பர் மஜாகோ பிளான் வெறும் ரூ,100 யில் 90 நாட்கள் வேலிடிட்டி உடன் JioHotstar நன்மை

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :