Reliance Jio 5G Phone with Qualcomm chipset
நீங்கள் OTT யில் கன்டென்ட் பார்ப்பதை அதிகம் விருபுவிர்கள ஆனால் குறைந்த பட்ஜெட் காரணமாக, எல்லா ஆப்களுக்கு நீங்கள் சப்ஸ்க்ரைப் முடியவில்லையா? எனவே இப்போது கவலைப்பட வேண்டாம், ஏனென்றால் நாங்கள் உங்களுக்காக Reliance Jio யின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளோம், இது ரூ.400க்கும் குறைவான முழு 12 OTT ப்லாட்பர்ம்களுக்கு அணுகலை வழங்குகிறது, இதுமட்டுமின்றி, இந்த திட்டம் உங்களுக்கு 6ஜிபி கூடுதல் டேட்டாவையும் வழங்குகிறது. நாம் பேசும் திட்டத்தின் விலை ரூ.398. இந்த திட்டத்தின் அனைத்து விவரங்களையும் பார்ப்போம்
ஜியோவின் 398 ரூபாய் கொண்ட இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு வருகிறது இதன் கீழ் பயனர்கள் 2 ஜிபி அதிவேக தினசரி டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் ஒவ்வொரு நாளும் 100 SMS வசதியைப் வழங்குகிறது இது தவிர, நிறுவனம் இந்த ரீசார்ஜ் மூலம் வாடிக்கையாளர்களுக்கு 6ஜிபி அதிவேக போனஸ் டேட்டாவையும் வழங்குகிறது.
6ஜிபி அதிவேக டேட்டா வவுச்சரை MyJio ஆப் மூலம் பெறலாம். கூடுதலாக, ஜியோசினிமா பிரீமியத்தின் 28 நாட்கள் சந்தா கூப்பனும் பயனரின் MyJio அக்கவுண்டில் பேலன்ஸ் வைக்கப்படும். இது தவிர, தினசரி டேட்டா ஒதுக்கீட்டை உட்கொண்ட பிறகு, இன்டர்நெட் ஸ்பீட் 64 Kbps ஆக குறையும். இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் 5G டேட்டாவும் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க: WhatsApp யில் வந்துவிட்டது மிக அசத்தலான அம்சம் ஸ்பேம் காலை ஒரு நொடியில் ப்ளாக் செய்ய முடியும்
நீங்கள் டேட்டாவில் அதிக கவனம் செலுத்தி, தினமும் குறைந்தது 2ஜிபி டேட்டா தேவைப்பட்டால், ஜியோவின் ரூ.388, ரூ.299 அல்லது ரூ.249 திட்டத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். இந்த மூன்று திட்டங்களிலும் தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMSகிடைக்கும். இருப்பினும், முதல் இரண்டு திட்டங்களின் சேவை செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள், மூன்றாவது திட்டம் 23 நாட்கள் மட்டுமே நீடிக்கும். இது தவிர, ரூ. 388 ரீசார்ஜ் செய்தால், பயனர்கள் 3 மாதங்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் சப்ச்க்ரிப்சன் வழங்கப்படுகிறது