reliance jio super plan at rs 699 offers free amazon prime and netflix
இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான reliance jio தனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ப பல்வேறு ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. நீங்கள் JioPhone ஐப் பயன்படுத்தினாலும், நிறுவனம் ரீசார்ஜ் திட்டங்களின் நீண்ட லிஸ்டை கொண்டுள்ளது, அதன் கீழ் நீங்கள் தினசரி டேட்டா, காலிங் மற்றும் ஜியோ ஆப்களுக்கான இலவச சப்ச்க்ரிப்சன் வழங்குகிறது.
இந்த நன்மைகளுடன் வரும் மற்றும் அதன் விலை ரூபாய் 100 க்கும் குறைவான இரண்டு திட்டங்களைப் பற்றி நாம் பார்க்கலாம்.
ஜியோ போன் பயனர்களுக்கு, ரூ.75 திட்டம் 23 நாட்களுக்கு சேவை வேலிடிட்டியாகும் இதில், வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 100எம்பி + 200எம்பி டேட்டா (மொத்தம் 2.5ஜிபி டேட்டா) வழங்குகிறது. இது தவிர, இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 50 SMS வசதியும் வழங்கப்படுகிறது. இது தவிர, இந்த திட்டம் JioTV, JioCinema மற்றும் JioCloud ஆகியவற்றிற்கான இலவச அணுகலையும் வழங்குகிறது.
இப்போது ரூ.91 ரீசார்ஜ் பற்றி பேசுகையில், இது பயனர்களுக்கு மொத்தம் 3ஜிபி இன்டர்நெட் டேட்டாவை வழங்குகிறது, அதாவது தினசரி 100எம்பி + 200எம்பி ஹை ஸ்பீட் டேட்டா. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் மற்றும் 50 SMSகளும் வழங்கப்படுகின்றன. இறுதியாக, ரூ.75 திட்டத்தில் கிடைக்கும் அதே மூன்று ஜியோ ஆப்களுக்கான அக்சஸ் இங்கேயும் வழங்குகிறது இந்த நன்மைகள் அனைத்தும் 28 நாட்கள் வேலிடிட்டியாகும்.
இதையும் படிங்க:Moto G34 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் டாப் அம்சங்கள் தெருஞ்சிகாங்க
ரூ.200க்கு குறைவான ஜியோபோன் திட்டங்களைப் பற்றி பேசுகையில், ரூ.125, ரூ.152 மற்றும் ரூ.186 ஆகிய மூன்று விருப்பங்கள் உள்ளன. முதல் திட்டத்தில், பயனர்களுக்கு 23 நாட்கள் வேலிடிட்டியும், இரண்டாவது திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டியும் கிடைக்கும். இந்த இரண்டு பேக்குகளிலும் கிடைக்கும் நன்மைகள் ஒரே மாதிரியானவை. இரண்டிலும் நீங்கள் தினசரி 0.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங் 300 SMS மற்றும் ஜியோ ஆப்களுக்கான அக்சஸ் வழங்குகிறது.
மறுபுறம், ரூ.186 திட்டம் சற்று வித்தியாசமானது. இந்த திட்டம் பயனர்களுக்கு 1 ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடெட் காலிங் ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் 28 நாட்கள் சேவை வேலிடிட்டியின் கீழ் ஜியோ ஆப்களின் இலவச சப்ச்க்ரிப்சன் ஆகியவற்றை வழங்குகிறது.